இனப்பிரச்சனைக்கு தீர்வு காண ஐனாதிபதியால் முடியும்- சம்பந்தன் நம்பிக்கை

0
555

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான  இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிரதம அதிதியாக சிறப்பித்த யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி  தொழில் நுட்ப மையத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

தனது உரையின் போது, ‘தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உங்களால் முடியும் அதனை நீங்கள் செய்ய வேண்டும். அப்படியாக நீங்கள் அந்த கருமத்தினை நிறைவேற்றுகின்ற போது சர்வதேச அளவில் நீங்கள் போற்றப்படுவீர்கள்’ என சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.