இணைந்து செயற்படும் காலம் ஏற்பட்டுள்ளது.

0
595

(மூதூர்நிருபர்)
கிழக்கில் தமிழ் முஸ்லீம்கள் நிலையான சமாதனத்தை கொண்டு வரும் வகையில் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படும் காலம் ஏற்பட்டுள்ளது. என மூதூர் நகரில் இடம்பெற்ற ஆரம்பக்கலந்துரையாடலில்; தமிழ் முஸ்லீம்புத்திஜீவிகள் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர்..
நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் ஒடுக்குமுறை, வன்முறை நிலமையும் அவற்றை தடுக்க அடிமட்ட மக்கள் மத்தியில் இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பற்றிய ஆரம்ப கலந்துரையாடல் நேற்றயதினம் காலை 10.00 மணியளவில் நடைபெற்றன.

இங்கு மூதூர் மத்தியஸ்த சபையின் தலைவர் ஜே.எம்.இக்பால், ஓய்வு நிலை அதிபர். ரி.தர்மலிங்கம், தோப்பூர் காதி நீதிபதி றிஸ்வான் மௌலவி, மத்தியஸ்த சபை யின் மற்றுமொரு உறுப்பினரான ஏர்.எம்.நிசார், ந.அஞ்சலிதேவி உள்ளிட்ட 10 இற்கும் அதிகமான மத்தியஸ்த சபை பிரதிநிதிகளும் அமையத்தின் தலைவர் ஆர்.தர்மரெட்ணம், இளைஞர் அபிவிருத்தி அகத்தின் திட்டமுகாமையாளர் க.லவகுகராஜா,அகம் அவ்வமைப்பின் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம், மூதூர் இந்து இiளுஞர் மன்றத்தின் செயலாளர் க.த.பொன்னுத்துரை மற்றும், தமிழ் கிராமங்களில் இருந்து வருகைதந்திருந்த பாடசாலை அதிபர்கள், கிராம முன்னோடிகள் என அதிகளவிலானோர் இந்த ஆரம்பக்கலந்துரையாடலில் பங்கு கொண்டனர்.இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஒருங்கிணைப்பில் நடந்த இக்கூட்டத்தில் கருத்து வெளியிட்டநீண்டகால சமாதான செயற்பாட்டாளும் மூதூர் மத்தியஸ்த சபைத்தவிசாளருமான ஜே.எம். இக்பால் குறிப்பிடுகையில்,
“எமது பிரதேசங்களில் யுத்த காலத்தில் விசமிகளால் அவ்வபப்போது ஏற்படுத்தப்பட்ட சமாதானத்தை சீர் குலைக்கும் நடவடிக்கைகளின்போது இவ்வாறான சமாதானத்தை விரும்புவோர் மூலம் அவ்வப்போது பல சாவல்களுக்கு மத்தியில் அவற்றை தடுத்து நிறுத் த பாடுபட்ட வரலாறு உள்ளது. அந்த வகையில் நிலையான சமாதானத்தை நோக்கி இனக்குளுமங்களுக்கிடையில் நல்லுறவு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என அகம் நிறுவனம் எடுக்கும் இந்த முயற்சி இந்தக்காலத்தில் மிகவும் முக்கியமானது.பிரச்சனைகாலத்திலே மூதூர் சமாதானக்குளு என்ற ஓரு அமைப்பு செயற்பட்டது. அதில் நான் மற்றும் இங்குள்ள பொன்னுத்துரை போன்றவர்களும் அங்கத்தினராக இருந்து பல சவால்களுக்கு மத்தியில் செயற்பட்டோம். அந்த நிலமைகளில் மூதூரில் எல்லா இனமக்களும் நாங்கள் ஒன்று பட்டிருந்தோம்.அதற்காக பெரிய விலைகளைக்கொடுக்க வேண்டியும் இருந்தது.இரண்டு சமூகத்திலும் இவ்வாறான பிரச்சனைகளை தூண்டிவிடுவதற்கான வர்களும் இருந்தார்கள் அவர்களைக்ணகாணிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருந்தது.
அந்த சமாதான குளுவினுடைய செயற்பாடுகாரணமாக அதிகமான பிரச்சனைகள் இன்னும் திவிரமடையாமல் பார்த்தக்கொண்டோம்.அகத்தின் பிரதிநிதிகளும் அந்தக்காலத்தில் நொன்வயலன் பீஸ்போஸ் என்ற அமைப்புடன் இணைந்து வன்முறைக்குள் மாட்டிக்கொண்ட மக்களை பாது காப்பதில் செயற்பட்டதனை நாங்கள் அறிவோம். அந்த வகையில் அவ்வமைப்பு மீண்டும் காலத்தின் தேவை கருதி இவ்வாறான ஓரு கலந்துரையாடலை செய்ய வளி ஏற்படுத்தியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. என்னதான் சமாதானம் வந்து விட்டது என்று சொன்னாலும் நாம் இருந்துவிடமுடியாத நிலமையே நாட்டில் காணப்படுகின்றன. அந்த சமாதனத்தை நிலையாக உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு கடமையும் எமது பகுதிகளில் உள்ள புத்திஜீவீகளுக்குள்ளது.தற்போது நாட்டில் உள்ள பல பிரிவிருக்கு இந்த சமாதானத்தை குலைக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அவரவர்கள் தங்களது சுயநலன்களுக்காக இதனை அவர்கள் செய்கின்றனர்.அரசியல் வாதிகளாக இருக்கலாம். அதிகாரிகளாக இருக்கலாம், அல்லது சமூகத்தில் உள்ள குளப்பவாதிகளாக இருக்கலாம் இதற்காக அவர்கள் செயற்படக்காத்திருக்கின்றனர். அவ்வாறான காலகட்டத்தில் நாங்கள் இவ்வாறான குளுக்களின் ஊடாக மக்கள் மத்தியில் நிலையான சமாதானத்திற்காக செயற்படுவது அவசியமாகின்றது.அந்தக்குளுக்களை நாங்கள் வலுப்படுத்தி செயற்பட வேண்டும். அதனால் பாரி ஓரு மாற்றத்தை கொண்டு வரமுடியும்.
உதாரணமாக உங்களுக்குத்தெரியும் அண்மையில் கண்டியில் நடைபெற்ற முஸ்லீம்கள் மீதான வன்முறை போன்றன உண்மையை கூறவேண்;டியுள்ளன. முஸ்லீம்சமூகத்தை கொஞ்சம் திரும்பிபார்க்க வைத்திருக்கின்றன. தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால்தான தெரியும் என்பது போல தமிழ்மக்களின் பிரச்சனைகளை அவர்களின் போராட்டங்களை முஸ்லீம்மக்களில் பலர் புரிந்துகொள்ளத்தவறி விட்டார்கள் என்பதனை தற்போதைய கண்டி சம்பவங்கள் எமக்கு படிபித்துள்ளது அந்தக்காலகட்டத்தில்தமிழர்கள் எதிர் கொண்ட பல பிரச்சனைகளை எம்வர்கள் பலர் தெரிந்தும் தெரியாதது போல இருந்தும் உள்ளார்கள். பலருக்கு இப்பிரச்சனைகளின் ஆழம்புரியாமலும் இருந்துள்ளது என நான் நினைக்கின்றேன். என்பதனை நான் வெளிப்படையாக சொல்லியாக வேண்டும். சிறுபான்மையாக இருக்கின்ற நாங்கள் ஒன்று பட வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் தற்சமயம் இருக்கின்றோம்.
எந்தச்சமூகத்தில் பிரச்சனைகள் வந்தாலும் அந்தப்பிரச்சனைகளை குறைக்க இந்த க்குளு செயற்பட வேண்டும் அதுவே எம்முடைய நோக்கம்.இது காலத்தின் முக்கியமான கட்டத்தில் இதனை ஏற்பாடு செய்துள்ள அகம் நிறுவனம் யுத்த காலத்திலும் இவ்வாறான முயற்சிகளை செய்தமை நாம் அறிவோம்.எனவும் குறிப்பிட்டார்.இங்கு கருத்துவெளியட்ட சற்சிவானந்தம், அகம் கடந்த காலத்திலும் இவ்வாறான நிலையான சமாதானத்தைநொக்கிய பணிகளை இந்த நாட்டின் பொறுப்புள்ள பிரஜைகள் எனற் அடிப்படையில் செயற்படுத்தி வந்துள்ளது. இந்த நாட்டில் நிலையான சமாதனத்தை கொண்டு வரவேண்டுமாக இருந்தால் அடிமட்ட இனக்குளுமங்கள் விழிப்பாக செயற்பட வேண்டி யகட்டாயத்தை தற்கால நிகழ்வுகள் சுட்டிக்காட்டுக்கின்றன. கறிப்பாக பாதிக்கப்பட்டு வரும் தமிழ் முஸ்லீம்க் ஓர நிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளன. இந்த நாட்டின் நிலையான சமாதானத்தை கொண்டு வருவதில் சர்வதேச சக்திகள் உள்ளிட்ட உள்நாட்டு சயநல சக்திகளும் தடையாகவும் களபங்களை ஏற்படுத்தும் விதமாகவும் செயற்படுகின்றன. நாட்டிஎன் 1915ம்ஆண்டு தொடக்கமான வன்முறை வரலாறுகள் இதனை எமக்கு தெளிவாக்கியுள்ளன. இதற்கான நிரந்தரமான தீர்வைக்காண எமது சமூகங்கள் இணைந்து ஊறுதியானதும் புரிந்துணர்வானதுமான நடவடிக்கைகளை தீர்மானங்களை எடுப்பதுதான் எமது சமூகங்களின் எதிர்கால நிலையான வாழ்விற்கு வழியாக அமையும். அது வே நாட்டிலும் நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்கும் தமிழ் மக்களின் போராட்டம் தான் மாகாண சபை என்ற தீர்வை கொண்டு வந்தது. அதனால் பயன்பெறுவது முழநாட்டின் பிரஜைகள்தான். அதேபோன்று தமிழ் முஸ்லீம் சிறுபான்மையினர் இந்த நாட்டின் சூழலை புரிந்துகொண்டால் நிலையான தீர்வை விரைவாக எட்டிவிடமுடியும். மாறாக இன்று எந்த சமூகத்திலும் புத்திஜீவிகள் அரசில் ரீதியான பல அழுத்தங்களை கொடுக்கிறார்கள்;. இருந்தாலும் அது அரசியல் சக்திகளால் புரட்டிப்போடப்படுகின்றன. எனவே தற்காலத்தில் எமது இனக்குளுமங்கள் நிலமைகளை புரிந்து செயற்பட வேண்டியது அவசியம். அதற்காக உழகை;கவேண்டியதும் அவசியமாகும். எனவும் குறிப்பிட்டார்.
முடிவில் நிரந்தரமான சமாதானக்குளவிற்கான முன்னோடி குளுவொன்று ஏற்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் செய்யவேண்டிய பணிகளை திட்டமிட்டு, நிலையான குளுவையும் தெரிவ செய்து செயற்படுத்துவது என்ற ஏகமனதான தீர்மானம் எடுக்கப்பட்டது.