சமூகப் பணிகளில் வெள்ளிவிழா – மட்டக்களப்பு EDS

0
743

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம்(EDS) தனதுகல்விமற்றும் சமூகப் பணிகளில் வெள்ளிவிழா ஆண்டைக் கடந்து நடாத்தும் சாதனையாளர் கௌரவிப்பு விழா (18.03.2018) மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள ‘சிவநேசராசாமண்டபத்தில்’ நடைபெறுகிறது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை–2017, க.பொ.த(சா/த)–2016, க.பொ.த(உ/த) பரீட்சை–2017 என்பவற்றில் மாவட்டரீதியாகவும் பிரதேசரீதியாகவும் சிறந்தபெறுபேறுகளைபெற்ற 94 மாணவர்கள் சமய, இன வேறுபாடின்றி கௌரவிக்கப்பட உள்ளார்கள். இவ்விழா 1994ம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு உள்ளார்கள்.

உயர் பெறுபேறுகளைப் பெற்றமாணவர்களைக் கௌரவிப்பதுடன் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 2017ம் ஆண்டுக்கான சிறந்த பழையமாணவர் கௌரவம், இளம் கண்டுபிடிப்பாளர்கள், கலைச்சேவைக்கு பங்களிப்பு செய்தவர்களும் கௌரவிக்கப்பட உள்ளனர்.

இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ஞா.சிறிநேசன், கௌரவ ச.வியாழேந்திரன், கௌரவ சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், கௌரவ விருந்தினராக வைத்திய கலாநிதி அ.இளங்குமரன் மற்றும் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற காணி ஆணையாளர் க.குருநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.