அறிவு பூர்வமான முதலீட்டுக்கு வளமான பங்குச் சந்தை

0
615
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் பிணையங்கள் மற்றும் பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு என்பன இணைந்து அறிவு பூர்வமான முதலீட்டுக்கு வளமான எனும்-தொனிப்பொருளின் கீழ் பங்குச் சந்தை நகரங்கள் தோறும் பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றம் சமகால சந்தை நிலமைகள் தொடர்பான முதலீட்டு ஆர்வலர்களுக்கான விழிப்பூட்டும் கருத்தரங்கு இன்று காலை மட்டக்களப்பு ஈஸ்ற் லகூண் விடுதியில் இடம்பெற்றது.
இங்கு மூலதனச் சநதை அறிமுகம் மற்றும் துறை பெறுபேற்றுப் பகுப்பாய்வு சந்தை வாய்ப்பு தொடர்பான முன்னிலைப்படுத்தல் தொடர்பான விரிவுரைகள் இங்கு இடம்பெற்றன.வளவாளர்களாக ஆசிய அபிவிருத்தி வங்கி கூட்டு முதலீட்டுத் திட்ட ஆலோசகர் பீ.அசோகன் மற்றும் உரிமை முதல் ஆய்வு நிபுணர் ஆர்.ரகுராம் கலந்து கொண்டு பங்குச் சந்தை தொடர்பான விரிவுரைகளை நடாத்தினர்.
புங்குச் சந்தை முதலீட்டில் கவனம் செலுத்த வெண்டிய காரணிகள் பங்குத் தரகர் ஒருவரைத் தெரிவ செய்தல் புதிய கணக்கொன்றை ஆரம்பித்தல். வர்த்தகம் செய்பவர் எப்படி பங்கு வர்த்தகங்களை மேற்கொள்ளல் வர்த்தக விடயங்கள் தொடர்பான பிற விடயங்களை அறிதல். என்பன ஆராயப்பட்டது. அத்தோடு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் நம்பிக்கை அலகு நிறுவனங்களின் பிரதிநிதிகளை இவர்களை சந்திக்ககூடிய வாய்ப்புக்களையும் இவ கருத்தரங்கு மூலம் ஏற்படுத்த முடிந்தது. இங்கு மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.