வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் ‘கொன்கிரீட்’வீடுகள் மக்கள் பயனடைவார்கள். ஞா.ஸ்ரீநேசன் M.P

0
795

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் அமுல்படுத்தப்படவிருக்கும் 65,000 வீட்டுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள  ‘கொன்கிரீட்’ வீடுகளின் பொருத்தத்தன்மை தொடர்பாக ஆராய்வதற்கான கள விஜயம் ஒன்றுக்கான அழைப்பு மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்தது.

இவ் அழைப்பின் பிரகாரம்  பதுளை நகருக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீடுகளை பரிசீலனை செய்வதற்காக  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், சி.ஸ்ரீதரன் மற்றும் இ.சார்ல்ஸ் நிமலநாதன் ஆகியோர் அங்கம் வகித்த குழு 03.03.2018 அன்று குறித்த பிரதேசத்துக்கு சென்றது.மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் Eng.பொ.சுரேஷ் மற்றும் மேலதிக செயலாளர் திரு.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் இந்த கள விஜயத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விஜயத்தின் முடிவில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீட்டுத் தேவை அதிகமாக உள்ளதெனவும் அரசினால் வழங்கப்படும் வீடுகள் போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டதோடு மீள் குடியேற்ற அமைச்சினால் ஏற்கனவே முன் மொழியப்பட்ட பொருத்து வீடுகளுக்கு பதிலாக தற்போது அமைக்கப்படுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள ‘கொன்கிரீட்’ வீடுகளின் பொருத்தத்தன்மை திருப்தி அளிப்பதாகவும் வெளிநாட்டு கடன் திட்டத்தில் மக்களுக்கு மானியமாக கிடைக்கும் இவ்வீடுகள் வழமையாக அரசினால் வழங்கப்படும் வீடுகளுக்கு மேலதிகமாக அமையும் என்பதால் எமது பிரதேச மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்பதாகவும் தெரிவித்தார்.