ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கிவைப்பு – மாமாங்கேஸ்வரர் ஆலய விஷேட பூஜையிலும் பங்கேற்பு

0
659
(எஸ்.எஸ்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை (03.03.2018 ) மட்டக்களப்புக்கு விஜயம் செய்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கிவைத்தார்.

இதில் 212 சிங்கள மொழிமூலமான பட்டதாரிகளுக்கும், 91 தமிழ் மொழிமூலமான பட்டதாரிகளுக்குமாக  313 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டது ​
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி  உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வைத் தொடர்ந்து மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அங்கு இடம்பெறும் விஷேட பூஜை வழிபாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.