அமெரிக்காவில் சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை பட்டறை! இலங்கையிலிருந்து ஒரேயொரு பிரதிநிதியாக மட்டு ஆசிரியை

0
654
காரைதீவு  நிருபர் சகா
 
சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை (TEA) பட்டறையொன்று அமெரிக்காவிலுள்ள பல்கலைக்ககழகமொன்றில்  நடைபெற்றுவருகின்றது.
 
உலகெங்கிலுமிருந்து 21 நாடுகளைச்சேர்ந்த ஆங்கில ஆசிரியர்கள் இச்சர்வதேச ஆறுவாரகால பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டுள்ளனர்.
 
இப்பட்டறை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மார்ச் 12ஆம் திகதிவரை நடைபெறுகிறது.
 
இலங்கையிலிருந்து ஒரேயொரு பிரதிநிதி கலந்துகொண்டுள்ளார். அதுவும் ஒரு தமிழ் இளம் ஆசிரியை.கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடாவலயத்தின் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய ஆசிரியை செல்வி சாமித்தம்பி பிரபாஜினி என்பவரே கலந்துகொண்டுள்ளார்.இவர் காரைதீவைப்பிறப்பிடமாகக் கொண்டவர்.
 
கல்வியில் பால்நிலைசமத்துவம் தொழினுட்பத்தின் ஒருங்கிணைப்பு கலப்புகலாசாரம் முதவிய கருப்பொருளில் இப்பயிற்சிப்பட்டறை நடாத்தப்படுகிறது. 
 
நைஜீரியா  கொலம்பியா இந்தியா இலங்கை வியட்னாம் துருக்கி கமருன் பங்களாதேஸ் பெரு சிம்பாப்வே சம்பியா ருவாண்டா கம்போடியா அல்ஜீரியா போன்ற 21 நாடுகளைச் சேர்ந்த ஆங்கில ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டுள்ளனர்.
 
இப்பயிற்சிப்பட்டறை அமெரிக்காவிலுள்ள ஒகியோ பௌலிங் கிறின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவருகின்றது. இப்பல்கலைக்கழகம் சாவ்தேச ரீதியாக ஆங்கிலஆசிரியர்களின் கற்பித்தல் வாண்மைத்துவத்தை மேம்பாடடையச்செய்யும் நோக்கிலும் ஜக்கிய அமெரிக்க  நாடுகள் தொடர்பான அறிவை அதிகரிக்கும் நோக்கிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகின்றது.
 
புதிய கற்பித்தல் முறைமைகள் பாடத்திட்டமிடல் கலைத்திட்ட அபிவிருத்தி அறிவுறுத்தல் தொழினுட்பம் ஆகியவற்றை மையப்படுத்திய இப்பயிற்சி அமெரிக்காவின் இரண்டாம்நிலைப்பாடசாலைகளில் அமெரிக்க ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவருகிறது.
 
சர்வதேச ஆராய்ச்சி மற்றும்  பரிமாற்றசபையின் நிருவாகத்தின்கீழுள்ள அமெரிக்க திணைக்கள கல்வி கலாசார அலுவல்கள் வாரியம் (IREX) இத்திட்டத்திற்கு அனுசரணையாக உள்ளது.