வாழைச்சேனை விபத்தில் ஒருவர் மரணம் மூவர் காயம்

0
564

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

பிரதான வீதியால் வந்த மோட்டர் சைக்கிள் முந்துவதற்கு செல்ல திரும்பும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் புணாணை ரிதிதென்னை மீராசாஹிபு வீதியைச் சேர்ந்த முகம்மட் ரசாக் றிபான் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், அதே வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் அஷ்வர் (வயது 23) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவகுமார் துலக்ஷன் (வயது 23) மற்றும் நாகையா ஜனுசன் (வயது 22) ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.