தேசிய பாரிசவாத விழிப்புணர்வு  நிகழ்வு பாடசாலை அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்

0
972

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தேசிய பாரிசவாத விழிப்புணர்வு  நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

எதிர் வரும் 24 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில்  நடைபெறவுள்ள தேசிய பாரிசவாத விழிப்புணர்வுநிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து வலய பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதல் தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு தெளிவு படுத்தும்  கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய பாரிசவாத விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார் .

இதேவேளை இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் , சுகாதார பிரதி அமைச்சர் ,கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் .

இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து  கல்வி வலயங்களின் அதிபர்கள் , கல்விப்பணிப்பாளர்கள்   ,கல்வித்திணைக்கள அதிகாரிகள் ,  கலந்துகொண்டனர்  

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய ரீதியிலான பாரிசவாத விழிப்புணர்வு  நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களினால் பாரிசவாத நோய் தொடர்பாக காட்சிப்படுத்தபடவுள்ள சித்திரங்கள் , பதாகைகள் ,சுவர் ஓட்டிகள் போன்றவைகள் விழிப்புணர்வு ஆக்கங்களில்  தெரிவு செய்யப்பட்ட  சிறந்த ஆக்கங்களுக்கும், சிறந்த பாடசாலைக்கும்  ஜனாதிபதியினால் பரிசில்களும் சான்றிதள்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.