பிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிராக எந்தவித விசாரணைகளும் இல்லை – இராணுவ தளபதி.புலிகளை சிங்கம் கொன்றுவிட்டது.

0
670

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு எதிராக எந்தவித விசாரணைகளும் நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி பெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.

இணையத்தளங்களில் தெரிவிக்கப்படுவது போல், ஆர்ப்பாட்டகாரர்களின் கழுத்தை வெட்டுவதாக குறித்த இலங்கை உயர்ஸ்தானிகரக அதிகாரி தெரிவித்தது நிரூபணமாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை அமைப்பை, சிங்கம் கொன்றொழித்து விட்டதாக, தமது அங்கியில் உள்ள சிங்கத்தை காட்டி சமிஞ்சை மூலம் வெளிப்படுத்தினார் என்பது ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட இராணுவ தளபதி, அதனடிப்படையில் அவருக்கு எதிராக எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்