பிரிகேடியர் பிரியங்க பெரும்பான்மை மக்களிடத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோ ஆகி வருகிறார் ஆக்கப்படுகிறார்

0
766

பிரிகேடியர் பிரியங்க பெரும்பான்மை மக்களிடத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோ ஆகி வருகிறார் ஆக்கப்படுகிறார் என்றும் சொல்லலாம் , இதைப்பாராட்டி அவருக்கு தேசிய விருது வழங்கப்படலாம்,அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இராணுவத்தளபதியாக வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இது ஒருபுறமிருக்க பிறிகேடியர் நடந்துகொண்டவிதம் குறித்து
தாம் வெட்கப்படுவதுபோன்ற கருத்துப்பட பல சிங்கள நண்பர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுவருவதையும் ஒருபுறம் அவதானிக்க முடிகின்றது.

இரண்டும் வருவது ஒரே சமூகத்திடமிருந்துதான்

தவறான முன்னுதாரணமாக இருந்தார்கள் என்பதை அவர்கள் சமூகமே அவர்களுக்கு உணர்த்துவதும் ஒரு தண்டனைதான்

இந்த புகைப்படத்தை பல சிங்கள நண்பர்கள் தமது முகநூல் சுவர் படங்களாக வைத்துள்ளார்கள்

இது டிக்டேட்டர்(The Dictator) எனும் ஆங்கிலப்படத்தில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற இஸ்லாமிய நாடொன்றின் இராணுவத்தளபதி கதாபாத்திரம்

எந்த சட்டதிட்டங்களையும் மதிக்காத,நாட்டு மக்களை பற்றி அலட்டிக்கொள்ளாத,பெண்களை கேவலமாக அடிமைப்படுத்தும் ஒரு தவறான முன்னுதாரணமான இஸ்லாமிய இராணுவத்தளபதி அலாவுதீன்தான் இவர்.

படத்தில் இது ஒரு மோசமான காமடி கதாபாத்திரம். டம்மி பீசு என்பார்களே அந்த மாதிரி.

இவன் இப்படி கை காட்டித்தான் தனக்கு பிடிக்காதவர்களை அடையாளப்படுத்துவான் அவனது படை அவர்களை கொலை செய்வார்கள்

      
நன்றி
பெனடிக்ட் நியூமன்