இலங்கையில் இனநல்லிணக்கத்தை வலுப்படுத்தியவர் மறைந்த பெல்லன்வில தேரர்!

0
445
சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாறைக்கிளை அனுதாபம்!
(காரைதீவு  நிருபர் சகா)
இலங்கையின் தேசிய நல்லிணக்கத்திற்கு பலவருடங்களாக சீரிய பணியாற்றிவந்த எமது அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் தலைவர் பேராசிரியர் அதிவண.பெல்லன்வில்விமலரத்ன தேரரின் மறைவு பாரிய வெற்றிடத்தைத்தோற்றுவித்துள்ளது. அன்னார் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

 
 
இவ்வாறு சமாதானத்திற்கான சமயயங்களின் இலங்கைப்பேரவையின்(ளு.டு.ஊ.சு.P) அம்பாறைமாவட்டக்கிளை அனுதாபச்செய்தியை வெளியிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டக்கிளையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது.
 
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தராகவிருந்த அவர் இங்கையின் புகழ்பூத்த பெல்லன்வில ரஜமகாவிகாரையின் பிரதான குருவாகவிருந்தார்.
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பேராசிரியராக நீண்டகாலம் பணணியாற்றிய அவர் பழகுவதற்கு இனிமையானவர்.நல்லகுணம் படைத்த கல்விமான்.அடக்கமானவர்.
 
எமது சங்க நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். சங்கத்தின் ஆணிவேராகத்திகழ்ந்தவர்.சர்வதேசநாடுகளுடன் தொடர்புள்ளவர். குறிப்பாக நாம் சிறுபான்மையினர் செல்லும்போது மிகவும் எளிமையாக வந்து குசலம்விசாரிப்பதோடு அம்பாறை மாவட்டக்கிளையை எப்போதும் புகழ்ந்துபேசத்தவறமாட்டார். 
இறுதியாக கதிர்காமத்தில் நடந்த எமதுவருடாந்தபொதுக்கூட்டத்தில் தனதுவேலைப்பழு காரணமாக தலைவர் பதவியிலிருந்து ஒதுங்குவதாகத் தெரிவித்தபோது எவரும் அதில் உடன்படவில்லை. அந்தளவிற்கு பலரது மனங்களிலும் அவர் நீங்காத இடத்தைப்பிடித்திருந்தார்.
அங்கிருந்த சபையினர்அவரை ஆலோசகராக பிரேரித்தபோதிலும் அவர் அன்பாக பெருந்தன்மையுடன் அதனை மறுத்து மற்றுமொரு தேரருக்கு விட்டுக்கொடுத்தார். அப்படிப்பட்ட பண்புள்ள தேரரை இனிநாம் காண்போமா என்பது சந்தேகமே.
 
இவர் வருகைதருவிரிவுரையாளராக லண்டன் பல்கலைக்கழகம் சென்றுவருபவர். 1980களில்லண்டன் லங்கேஸ்ரர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி(Pர்.னு) பட்டம் பெற்ற அவர் கோட்டை கல்யாணசமகிரி தம்ம மகசங்கத்தின் பிரதான அனுநாயக்கராகவிருந்தார்.
மனிதரிடத்திலும் உயிர்களிடத்திலும் அன்பானவர். அந்தவகையில் தான்வளர்த்த விகாரை யானையான மியான்குமாரவுக்கு உணவளிக்கும்தருணம் தட்டுப்பட்டுவீழ்ந்தபின் ஆஸ்பத்திரியில் அவரது உயிர்பிரிந்திருக்கிறது. நாளைமறுதினம் (8) அவரது பூதவுடல் ஜயவர்த்தனபுரபல்கலைக்கழக மைதானத்தில் தீயுடன் சங்கமமாகவுள்ளது.
 
இத்தருணத்தில் அம்பாறை மாவட்ட மூவினமக்கள்சார்பாகவும் எஎமது கிளைசார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.