200 விகாரைகள் அமைக்க கணேசமூர்த்திக்கு நிதி ஒதுக்கீடு –கருணா தகவல்.

0
731
வடக்குக் கிழக்கைப் பிரிக்கவும் மாட்டேன் தீர்வும் தரமாட்டடேன் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  மற்றும் வடக்குக் கிழக்கில் 1000 விகாரைகளை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க அம்பாறையில் நடைபெற்க கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்திக்கும் 200 விகாரைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நான் அறிகின்றேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென்எருவில் பற்று தேற்றாத்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் தி.தேவறஞ்சன் தலைமையில் தேற்றாத்தீவு கிராமத்தில் சனிக்கிழமை இரவு (03) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூ;டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

அமீரலியை அமைச்சராக்கிவிட்டு தற்போது அமீரலியின் வாலைப் பிடித்துக் கொண்டு கணேசமூர்த்தி திரிகின்றார். களுதாவளையில் முஸ்லிம்களைக் கொண்டுவருவதற்கும் அவர் பாடுபட்டு வருகின்றார். தற்போது தமிழ் மக்களின் பகுதிகளில் விகாரைகளையும் கட்டுவதற்கு உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் கட்டளைத்தளபத்தியாக இருக்கும்போது 40000 போராளிகள் எனக்குக் கீழ் இருந்தார்கள் அதிலே 11000 பெண் போராளிகள் இவற்றை வைத்துப் போரிட்டவன்தான் மட்டக்களப்பான். அப்போது எமது வீரத்தைக் காட்டியிருந்தோம். 300 பேருடன்போய் 24 மணி நேரத்தில் ஆனையிறவு படை முகாமைக் கைப்பற்றினேன்.  எனது இந்த வெற்றியை தலைவர் பிரபாகரன்கூட நம்பியிருக்கவில்லை. அந்த சண்டையில் 18 பேர் வீரச்சாவடைந்தும், 70 பேர் காயப்பட்டிருந்தனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து தற்போது பலர் வெளியேறியிருக்கின்றனர், இவ்வாறு கூட்டமைப்புக்குள் நடைபெறும் என எனக்கு நன்கு தெரியும். சம்மந்தன் ஐயா ஓய்வெடுத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றுமுழுதாக சிதறிப்போய்விடும்.  அக்கூட்டமைப்புக்குள் தமிழ் உணர்வாளர்கள் ஒருவரும் இல்லை. இதனை அறிந்துதான் நான் ஒரு தமிழ் கட்சியை ஆரம்பித்திருக்கின்றேன்.
வட பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் தமிழ் மக்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்தான் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மட்டக்களப்பில் அப்பரிசோதனை நடைபெறவில்லை. ஏனெனில் மட்டக்களப்பு மக்கள் அக்கூட்டமைப்புக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலைபோய்விட்டது. ஆனால் தற்போது அக்கூட்டமைப்பிலுள்ளவர்கள், கோடீஸ்வரர்களாக இருந்து மாளிகைகளைக் கட்டிக் கொண்டுள்ளார்கள்.
நாங்கள் போராடியபோது அந்தப் போராட்டத்திற்குப் பயந்து தப்பி ஓடிய அரியநேத்திரன், இராணுவத்திற்குக் காட்டிக் கொடுத்த யோகேஸ்வரன், போன்றோர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள். இதனைச் செய்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது அவர்களுக்கு.
இரத்த ஆற்றை ஓட வைத்தவன் நான் ஆனால் வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஹிஸ்பல்லாவுக்கு இது தெரியுமா? என அவர் தெரிவித்தார்.
sakthi