70ஆவது தேசிய சுதந்திர தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு

0
490

70ஆவது தேசிய சுதந்திர தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சரியாக காலை 9 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான தேசிய சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்த போர் வீரர்களுக்காக மரியாதை செலுத்தப்பட்டது.

அதனையடுத்து பாடசாலை மாணவர்கள், பொலிஸ், மற்றும் கலாசார அணியினரின் அணி வகுப்பு மரியாதையையடுத்து அரசாங்க அதிபரின் சுதந்திரதின உரை இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரின் உரையினையடுத்து ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளுக்கமைவாக யோகா பயிற்சிக்கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளில் திணைக்கங்களின் தலைவர்கள், முப்படைகளினையும் சேர்ந்த உயர் அதிகாரிகள், படைவீரர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.