கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் உழவர் திருநாள்

0
672
U

கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையினால் சின்னவத்தை நாம் தமிழர் பண்பாட்டு கழகத்தின் ஒழுங்கமைத்தலில் உழவர் திருநாள் – 2018 நிகழ்வு சின்னவத்தை கிராமத்தில் இன்று (28) நடைபெற்றது.


கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் திரு.கனேசமூர்த்தி பிரதி அதிபர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள் சபையின் செயலாளர் ம.கலாவதி நாம் தமிழர் பண்பாட்டு கழகத்தின் தலைவர் பிரசாத் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆலயங்களின் நிர்வாக உறுப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் சின்னவத்தை பாலாச்சோலை மற்றும் ஆணைகட்டியவெளி அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சின்னவத்தை கிராமத்தின் முகவாயிலில் அமைக்கப்பட்டு இருக்கின்ற சோழ மன்னனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகள் கௌரவிக்கப்பட்டு மாட்டு வண்டியில் பவனிவரவும், உழவர்கள் அதனை தொடர அடுத்த தலைமுறைக்கு எமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் விட்டுச்செல்ல அறநெறிப்பாடசாலை மாணவ செல்வங்களும் ஆசான்களும் மக்கள் கூட்டமும் அணி தொடர ஊர்வலமாக சென்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தை வந்தடைந்தனர்.

எமது பாரம்பரிய கலாசார முறைகளுக்கமைய உரலில் நெல் இட்டு உலக்கையினால் இடித்து அதனை புடைத்து மண் பாணையில் இட்ட பால் பொங்க ஆலய குரு மற்றும் அதிதிகள் பானையில் அரிசியினை இட்டு பொங்கல் இடம் பெற்றதை தொடர்ந்து மண்டபத்தில் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆலய பிரதம குரு ஆசியுரை வழங்க ஆரம்பமான நிகழ்வுகள் அதிதிகளின் உரையும் கலை நிகழ்வுகளையும் தொடர்ந்து விவசாயிகளை கௌரவப்படுத்த இவ் எல்லை கிராமத்திலிருந்து மிகுந்த கஷ்டத்துக்கும் மத்தியில் சாதனை படைத்த விவசாயிகளின் பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டனர். பட்டம் பெற்ற பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மற்றும் மாகாண மட்டத்திற்கு விளையாட்டு துறையில் தெரிவு செய்யப்பட்ட என விவசாயிகளின் பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.