வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பதுதான் முடிவென்றால் கிழக்கு தமிழர்கள் மாற்று திட்டங்கள் தொடர்பாக சிந்திக்க வேண்டிவரும்.

0
820
பாண்டிருப்பில் சுரேஸ்  
காரைதீவு  நிருபர் சகா
 
பாண்டிருப்பு 10 ஆம் வட்டார த.வி.கூட்டணி வேட்பாளர் மகேந்திரராஜாவின் தேர்தல் காரியாலயம் அண்மையில்  திறந்துவைக்கப்பட்டது.
 
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக  கல்முனை மாநகரசபைத் தேர்தலில் பாண்டிருப்பு இரண்டு 10  ஆம் தேர்தல் வட்டாரத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் செல்லப்பா மகேந்திரராஜா  அவர்களின் தேர்தல் காரியாலயம் நேற்று  24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
 
தமிழர் விடுதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ. பி ஆர் எல் எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஸ்ரீ ஹரிகரன் குருக்கள்  மற்றும் கட்சி முக்கியத்தர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை வேட்பாளர்கள்  பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
அங்கு பேசிய தமிழர் விடுதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்  கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்தரன் தெரிவித்தார்.வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பதுதான் முடிவென்றால் கிழக்கு தமிழர்கள் மாற்று திட்டங்கள் தொடர்பாக சிந்திக்க வேண்டிவரும்.
 
வடக்கு கிழக்கில்  உள்ள தமிழ் பேசும் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிங்களும் இணைந்த வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்து தங்கள் பாதுகாப்பு தங்களின் பொருளாதார முன்னேற்றம் தங்களின் தனித்துவங்களை காக்க வேண்டும்.இணைந்த வடகிழக்கில்  தமிழ் மக்களும்இ முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக சகோதரத்துவமான முறையில் வாழவேண்டும் என்பது எமது நிலைப்பாடு
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வடக்கு கிழக்குக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றார்கள் முஸ்லிம் தலைவர்கள் வடக்கு கிழக்குக்கு பிரிந்து இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான்  இருப்பார்களானால்  கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தங்களின் தங்களின் இருப்பு பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பில் மாற்று திட்டங்களை சிந்திக்க வேண்டிவரும்.  
 
 
அவர் மேலும் தெரிவிக்ககையில்….
 
த.தே.கூட்டமைப்பில் இருக்கக்கூடிய சம்பந்தன்இ மாவை சேனாதிராசாஇ சுமந்திரன் போன்றோர்கள் அரசாங்க நிகழ்ச்சி நிரலுக்கு செயற்பட்டுக்கொண்டு போவதன் காரணமாக தமிழ் மக்கள் இவர்கள் மேல் விரக்தியடைந்து காணப்படுகின்றார்கள்.
 
தமிழர் ஐக்கியத்தினை முன்னிலைப்படுத்தி வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தோம். அந்த நேரத்தில் சகல தேர்தல்களிலும் அதிகளவான உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
 
அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை கைவிட்டு தாங்கள் நினைத்தவாறு செயற்படுவதும்இ அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவர்கள் செயற்பட்டதன் காரணமாக தமிழ் மக்கள் விரக்தியடைய காரணமாக இருந்திருப்பது மாத்திரமல்லாமல்இ தற்போது உருவாக்கப்பட்டு வரும் அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களுடைய அடிப்படை விடயங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு குறிப்பாக வடகிழக்கு இணைப்புஇ சமஸ்டி அரசியல் அமைப்பு முறைஇ தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளல்இ முழுமையான அதிகாரப்பகிர்வு இவைகள்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது த.தே.கூட்டமைப்பு மூலம் வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமாகும். இவை அனைத்தும் இந்த இடைக்கால அரசியல் சாசனத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
 
அவ்வாறான சூழ்நிலையில்தான் தமிழ் மக்களுடைய உரிமையினை வென்றெடுப்பதற்காக மாற்று புதிய அணியை உருவாக்கியிருக்கின்றோம். இத்தேர்தலுக்கு பிற்பாடு இந்த அணி மிகவும் வலுவான அணியாக மாறும் என எதிர்பார்க்கின்றோம்
 
எமது இந்த புதிய கூட்டுக்கு வடக்கு கிழக்கில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது எதிர்வரும் தேர்தலில் 1000 க்கு மேற்பட்ட வட்டாரங்களில் போட்டியிடுகின்றோம் எமக்கு இதில் பாரிய அளவு வெற்றியும் கிடைக்க் கூடிய நிலைமையே உள்ளது என்றார்.
 
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாடும்  கல்முனையில் இடம்பெற்றதுடன்   அம்பாறை மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டமும் காரைதீவில் நடைபெற்றிருந்தன.