காத்தான்குடி ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றப்படும்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

0
710

தொகுதிவாரி முறையிலேயே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றப்படும். அந்த யோசனை என்னால் முன்வைக்கப்பட்ட ஒன்றே. இது வேறொரு திருத்தம் கொண்டு வரும் வரை நிலையாக இருக்கும். இந்த ஊருக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் இருந்ததால் தான் எமது ஊருக்கான மாகாண சபை பிரிதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது ன புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி, ஊர் வீதி சின்னப்பள்ளி சதுக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,

மாகாண சபைகளின் அதிகாரங்கள் பலப்படுத்த வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றோம். அத்தோடு, வடக்கும் கிழக்கும் இணைவதற்கு இடமளிக்கவும் மாட்டோம். தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொகுதிவாரி தேர்தல் முறையானது பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

தேர்தல் நிறைவடைந்த பின்னர் நாட்டில் உள்ள அநேகமான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்லாது. ஆட்சியமைக்கும் அதிகாரம் எந்தக் கட்சிக்கும் இல்லாது போகும். கூட்டாட்சி நடத்தும் நிலையே ஏற்படும். அதனால் குழப்பமான, நிலையற்ற சபையாகவே அது இருக்கும். இந்நிலை, காத்தான்குடி நகர சபைக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்றார்