மாவடிமுன்மாரியில் வீதியை மறித்து ஆர்பாட்டம்.

0
676

.மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரியில் வீதியை மறித்து மக்கள் இன்று(24) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றுவதனை நிறுத்துமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
கடந்த 18ம் திகதி குறித்த மக்கள், சட்டவிரோத மண்ணேற்றுவதற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், மண்ணேற்றுவதினால் தமது வளம்சுரண்டப்படுவதுடன், இயற்கை பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், வீதிகள் உடைந்து போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பிரதேசசெயலாளர் மக்களுடன் பேச்சுவார்த்தையினை நடாத்தி; சட்டவிரோத மணலேற்றுவதனை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
பிரதேச செயலாளர், சட்டவிரோத மணலேற்றுவதனை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தபோதிலும், சட்டவிரோத மண்ணேற்றும் செயற்பாடு நிறுத்தப்படாமையினால் மீண்டும் இன்று ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.