தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள மகிந்த, மைத்திரி, ரணில் மட்டக்களப்பு விஜயம்.

0
471

பொது ஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தரவுள்ளார்.

மட்டக்களப்புக்கு வருகை தரும் அவர், காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில்நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கு பற்றவுள்ளார் என்று அறிய முடிகிறது.
இதே நேரம், மட்டக்களப்புக்கு தேர்தல் பிரச்சார வேலைகளுக்காக எதிர்வரும் 31ஆம் திகதி வருகை தரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க செங்கலடி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்தான்குடியில் நடைபெறும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.