முன்னாள் போராளிகள் என்ற பேரில் பல கட்சிகள் உலாவருகின்றனர். அவ்வாறானவர்களை போராளிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.பிரபாகரன்

0
761

முன்னாள் போராளிகள் என்ற பேரில் பல கட்சிகள் உலாவருகின்றனர். அவ்வாறானவர்களை போராளிகள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. எமது போராட்த்தினை சுக்குநூறாக்கி இந்த மண்ணில் இருந்து அழித்து ஒழிப்பதற்கு முழுமூச்சாக செயற்பட்டவர்கள். அவ்வாறானவர்கள் பல பெயர்களுடன் கட்சிகளை உருவாக்கியுள்ளனர். தமிழ்தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்தில் பேசக்கூடிய அதியுச்ச பலம்பொருந்திய கட்சியாக இருக்கின்றது. அப்பலத்தினை குறைக்க வேண்டுமென்றால், வாக்கின் வெகுமதியை குறைக்க வேண்டும். என்பதற்காக தற்போதைய அரசாங்கம் பல சின்னங்களுடன் ஊடுருவியுள்ளனர். அவ்வாறனவர்களுடன் பணத்திற்காக சிலர் அடிமையாகியுள்ளனர்என ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டு, அம்பாறை இணைப்பாளர் க.பிரபாகரன் தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளைகாரியாலமொன்று இன்று(16) செவ்வாய்க்கிழமை மாலை கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக, கொக்கட்டிச்சோலை வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் கோ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுகட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பட்டிருப்பு தொகுதி தமிழரசுகட்சி தலைவர் பா.அரியநேத்திரன் மற்றும் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு, இணைப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

அற்பசொற்ப ஆசைகளுக்காக, தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசின் கால்களில் விழவில்லை. இதனால்தான் ஜனநாயக போராளிகள் கட்சியாகிய நாம், பல கட்சிகள் எம்மை அழைத்தபோதும் அவர்களுடன் இணைந்து கொள்ளாமல் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டோம்

, சில கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துகொண்டும், அவர்கள் அமைச்சுப்பொறுப்பினை பெற்றிருக்கின்றனர். அவர்களைப் போன்றல்லாது, 16உறுப்பினர்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பானது, நிலத்தினைக் காக்க வேண்டும், தேசத்தினை காப்பாற்ற வேண்டும், மக்களை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக அரசின் கால்களில் அன்றிருந்து, இன்றுவரை விழாமல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனை அவதானித்ததன் பின்புதான், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கொண்டிருக்கின்றோம். எமது அரசியல் பயணமும் நகர்கின்றது. எங்களை பல கட்சிகள் அழைத்திருந்தாலும், போராடியதன் அர்த்தம், வலி, சுமைகளை சுமந்த, மக்களிடம் வருவதாகவிருந்தால், நாங்கள் நேர்வழியில் வரவேண்டும். தூய்மையான உள்ளத்தோடு வரவேண்டுமென்பதற்காகதான், தமிழ்தேசிய கூட்டமைப்பின் வழியில் வருகின்றோம். எமது இலக்கு தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும், நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், எங்களது பொருளாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதேயாகும். தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படமாட்டோம். ஒற்றுமையாக வேண்டும். ஒற்றுமையின் மூலமே நிரந்தர தீர்வை பெற முடியும்.என்றார்.