வ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌.முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

0
483
வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு இந்தியா அழுத்த‌ம் கொடுக்க‌ வேண்டும் என‌ வ‌ட‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌ன் கோரிக்கை விடுத்திருப்ப‌து கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ப‌ற்றி சிந்திக்காத‌ அவ‌ர‌து எதேச்ச‌திகார‌த்தையும் த‌மிழ் பேரின‌வாத‌ வெறியையும் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌சின் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ப‌ட்டிய‌ல் வேட்பாள‌ருமான‌  முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து,
வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌ய‌த்தில்  வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் அடிக்க‌டி தான் தோண்றித்த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்து வ‌ருகிறார்.
வ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌. இங்கு ப‌ல் இன‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். குறிப்பாக‌ கிழ‌க்கு ம‌க்க‌ள் இணைப்பை விரும்ப‌வில்லை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் இந்தியாவின் அழுத்த‌த்தை கோருவ‌து விக்னேஸ்வ‌ர‌னின் மேலாதிக்க‌ வெறியை காட்டுகிற‌து.
வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌யத்தில் முஸ்லிம்க‌ளும் இண‌ங்கினாலேயே த‌லையிட‌ முடியும் என‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இந்தியா தெளிவாக‌ தெரிவித்திருந்தும் இந்தியாவிட‌ம் அழுத்த‌த்தை கோருவ‌து முஸ்லிம்க‌ளை கிள்ளுக்கீரையாக‌ விக்னேஸ்வ‌ர‌ன் நினைத்துக்கொண்டிருப்ப‌தையே காட்டுகிற‌து.
ஆக‌வே வ‌ட‌மாகாண‌ ச‌பை முத‌ல்வ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் முத‌ல்வ‌ர் என‌ நினைத்துக்கொண்டிருப்ப‌த‌ன் மூல‌ம் த‌ன்னை இன‌வாதியாக‌ தொட‌ர்ந்தும் காட்டிக்கொண்டிருப்ப‌து ப‌டித்த‌ ம‌னித‌ருக்கு அழ‌கான‌த‌ல்ல‌ என்ப‌தை சொல்லிக்கொள்கிறோம்.