வளத்தாப்பிட்டியில் சு.க தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!

0
623
சம்மாந்துறைப்பிரதேசசபைக்கான உள்ளுராட்சிமன்றத்தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெள்ளி ஜெயச்சந்திரனின் தேர்தல் அலுவலகம் நேற்றுமாலை வளத்தாப்பிட்டியில் திறந்துவைக்கப்பட்டது.

 
சம்மாந்துறை பிரதேச சபையின் வளத்தாப்பிட்டி வட்டாரத்திற்கான  வேட்பாளர் வெள்ளி ஐெயசந்திரனின் அழைப்பின் பெயரின் ஏற்பாட்டில் மாகாணசபை உள்ளூராட்சிசபை சபைகளின் இராஐங்க அமைச்சரும் சட்டத்தரணியும் திருமதி சிரியானி விஐயவிக்ரம  கலந்து கொண்டு அலுவலத்தை திறந்துவைத்தார். சம்மாந்துறையில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளர் அச்சிமொகமட் மற்றும் அவருடன் அமைச்சரின் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இணைப்பாளர் முனியாண்டி  சிவாவும் கலந்துகொண்டார்.
 
 அலுவலகத்தைத்திறந்துவைத்தபிற்பாடு அங்கு மக்கள் சந்திப்பொன்றும் நடைபெற்றது.