குறுமன்வெளி கிராமத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.கிராம மக்கள்

0
610
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் குறுமன்வெளி கிராமத்திற்கு  அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத் தேர்தலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக பன்னிரெண்டு வட்டாரங்கள் சார்பாக வேட்பாளர்கள்  களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இச் சபைக்கு மொத்தமாக ஒரு கட்சி சார்பாக 23 உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளனர். இதன்படி வட்டாரம் சார்ந்த 12 பேரும் விகீதாசாரம் மற்றும் உபரி பட்டியல் மூலம் 11 வேட்பாளர்களின் பெயர்களும் கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் படி விகீதாசாரம்,உபரி பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பெயர் விபரம்  மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தப்படாமல் இருந்தது. இதனை நாங்கள் தற்பொழுது சரியாக அறிந்து கொண்டுள்ளோம். இதன்படி எமது கிராமத்திற்கு அநீதி இழைக்கப்ட்டுள்ளது. காரணம்  எமது கிராமத்திற்கு ஒரு வேட்பாளர் மாத்திரந்தான் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கிராமங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில கிராமங்களுக்கு  மூன்று பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தும் எமது கிராமத்திற்கு மாத்திரம் ஒரு வரை நியமித்துள்ளனர். சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அமைய இத்தேர்வு இடம்பெற்றுள்ளதாக  நாங்கள் அறிகின்றோம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துவருகின்ற பழம்பெரும் கிராமங்களில் எமது குறுமன்வெளி கிராமமும் ஒன்றாகும். நாங்கள் தொடர்ச்சியாக இக் கட்சிக்கே ஆணை வழங்கி வருகின்றோம். இந் நிலையில் எமது கிராமத்தினை புறக்கணித்து சில வட்டாரங்களை கட்சி முன்னுரிமைப் படுத்தியுள்ளமைக்கான காரணம் என்ன. இச்செயற்பாடு எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இச் செயற்பாட்டினால் எமது கிராமத்தில் ஏனைய கட்சிகளின் ஆதிக்கம் கூடியுள்ளது ஆதரவாளராகிய நாங்கள் ஏனையவர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றோம். இதற்கு முற்றுமுழுதான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்