தற்பொழுது அனைத்து வீடுகளும் ஓட்டையாகி வீட்டுக்குள் இருந்த குடும்பம் பிரிந்துவிட்டது.

0
650
நாங்கள் முன்னர் தூங்கிக் கொண்டு இருந்தோம் தற்போது நாங்கள் விழித்துக் கொண்டு இருக்கின்றோம், தற்பொழுது அனைத்து வீடுகளும் ஓட்டையாகி வீட்டுக்குள் இருந்த குடும்பம் பிரிந்துவிட்டது. என களுவாஞ்சிகுடி வாட்டாரம் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி விஜயலெட்சுமி இராமச்சந்திரன் தெரிவித்தார்..

ஒந்தாச்சிமட்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
வீட்டுக்குள் இருந்த எங்களை வீடுவீடாக வந்து  ஆற்றுப்படுத்தி தங்களை தமிழ் இனத்தின் தலைவனாக்கும் படி கூறியதற்கு அமைய அவர்களை நாங்கள் அசனத்தில் அரமச்செய்துவிட்டோம். ஆனால் அதன்பிற்பாடு அவர்கள் வீட்டுக்குள் இருந்த எங்களை  உதறித்தள்ளிவிட்டார்கள். தற்பொழுது வீடுகள் அனைத்தும் ஓட்டையாகிவிட்டது. வீட்டுக்குள் குடும்பமாக இருந்த அனைவரும்   ஒவ்வொரு திசையில் குடும்பம் பிரிந்து சென்று கொண்டு இருக்கின்றார்கள்.
நாங்கள்
படித்தவர்கள்,பண்பானவர்கள்,அன்பானவர்கள்,பலதரப்பட்ட இன்னல்களை சந்தித்து வளர்ந்தவர்கள் இவர்களின்  பலதரப்பட்ட விடயங்களை நாங்கள் படிப்படியாக உணர்ந்திருக்கின்றோம். இனியும்; இதுபோன்ற  போலி வார்த்தைகளுக்கு ஒருபோதும் நீங்கள் இடமளிக்க வேண்டாம். இதனால்தான் நாங்கள் நெடுங்காலமாக சொல்லொண்ண துயரங்களை சந்தித்திருக்கின்றோம். இதில் இருந்து நாங்கள் விடுபட்டு  எமது சமூகத்தை ஒரு அறிவுள்ள. அபிவிருத்தி அடைந்த சமூகமாக  மிளிரச் செய்ய வேண்டும். இதுவே காலத்தின் தேவையாகும்.
நாங்கள் முன்னர் தூங்கிக் கொண்டு இருந்தோம் தற்பொழுது நாங்கள் விழித்துக் கொண்டு இருக்கின்றோம், என்ற எண்ணப்பாங்கோடு நீங்கள் அனைவரும் செயற்பட வேண்டும். நான் இந்த கிராமத்தில் 10 வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றியுள்ளேன் எவ்வாறான சேவைகளை ஆற்றியுள்ளேன் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் எதிர்காலத்தில் அனைத்தவழங்களையம் நீங்களும் பெற்றுக் கொண்டு உங்களது சந்தத்திக்கு கையளிக் வேண்டுமாக இருந்தலால் எதிர்வரும் தேர்தலிலஐக்கிய தேசிய கட்சியினை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்