செலவுகள் குறைந்த தேர்தல் .மட்டக்களப்பில் கருணா.

0
585

எதிர்வரும் 2018.02.10 திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதித்துவப்படுத்தி தையல் இயந்திர சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று 10 திகதி மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் மாநகரசபையின் மேயர் வேட்பாளர் எஸ்.வசந்தக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கட்சியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் செயலாளர் வ.கமலதாஸ் மற்றும் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்களாக  பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் கருத்துத் தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன் இத்தேர்தலானது மிகவும் சாதகமான அமைகின்றது காரணம் செலவுகள் குறைந்ததாகவும் பிரசாரங்கள் கிராம மட்டங்ளில் செயற்படுத்த கூடுதலானதாகவும் இருக்கின்றது அந்தவகையில் கடந்த கிழமைகளில் வாகரை பிரதேச சபைக்குட்பட்ட பிரிவுகளில் எமது வேட்பாளர்களுடன் இணைந்து வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தோம் அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் நகர்புறம் அண்டிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அத்துடன் பிரச்சாரங்கள் இம்முறை தேர்தல் சட்டமூலங்களுக்கு அமைவாக பல சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது அதற்கு அமைவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு எமது நகர்வுகளை நகர்த்த வேண்டும் என கருத்துத் தெரிவித்தார்.