அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

0
491

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட 14 ஆம் வட்டார வேட்பாளர் தியாகராசாஸ்ரீஸ்கந்தராசா.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக பிரத்தியோக ஊடக சந்திப்பின் போதெ அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் தொடர்ந்து கூறுகையில்

எமது பிரதேசத்தை பொருத்தவரையில் மாகாணசபை உறுப்பினர்களோ பா.உறுப்பினர்களோ இங்கு இல்லை ஆகையினால் எமது கிராமங்களுக்கென ஒதுக்கப்படும் அபிவிருத்திகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவது குறைவாகவுள்ளது.

இருந்தும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டார ரீதியிலான தொகுதிவாரி தேர்தல் முறையானது மிகவும் இலகுவானதும் சாதகமானதுமாக அமைகின்றது காரணம் அம்முறையானது வேட்பாளர்களுக்கும் பொது மக்களுக்கும் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையாகவும் அபிவிருத்தியை நோக்கிய பயணமாகவும் இது அமைகின்றது என கூறிக்கொள்ளலாம்.

அத்துடன் தற்போது நான் மட்டக்களப்பு நகரசபைக்குட்பட்ட 14 ஆம் வட்டாரத்தில் போட்டியிடுகின்றேன் தேர்தலின் போது எமது பிரதேச மக்களின் வாக்குகள் மூலமாக வெற்றி பெற்றால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகளையும் செயற்திட்டங்களையும் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளேன் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் கருத்துத் தெரிவித்தார்.