தபால்மூல வாக்களிப்புக்கு தயாராகுங்கள்,தமிழ்தேசியகூட்டமைப்பு வேண்டுகோள்.

0
657

எதிர்வரும் பெப்ரவரி மாதம்  10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றன. குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறியுள்ளார். வரும் 22ஆம் திகதி தேர்தல் அலுவலகங்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. ஏனைய தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் நடைபெறவிருப்தாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு தமிழ் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்த தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ்தேசியகூட்டமைப்பின் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்துக்கு கட்டாயமாக வாக்களித்து எமது பலத்தை நிருபிக்கவேண்டும் என தமிழ்தேசியகூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது, மட்டக்களப்புமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சிதலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.