மாவடிமுன்மாரி வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி.

0
750

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மாவடிமுன்மாரி – மணற்பிட்டி வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், காணப்பட்ட ஆண்ணொருவரை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் இன்று(06) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மணற்பிட்டி, மாவடிமுன்மாரி வீதியின் அருகில் மோட்டார் சைக்கிளொன்று விழுந்த நிலையிலும், அதன் அருகில் நபரொருபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிகிடந்தமை கண்டு, அவ்வீதியால் சென்ற பயணிகள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உரிய நபரை பொதுமக்களின் உதவியுடன் மகிழடித்தீவு வைத்தியாசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் விபத்தாக இருக்ககூடும் என்ற கூறப்படுகின்ற நிலையிலும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.