டெங்கு ஆபத்துள்ள இடங்கள் பாடசாலையில் அடையாளம் காணப்படின் அதிபரது பிரத்தியேக நிதியிலிருந்தே தண்டப் பணம் செலுத்த வேண்டும்!

0
304
சம்மாந்துறை  வலயக் கல்வி பணிப்பாளர் சஹூதுல் நஜீம் உத்தரவு!
காரைதீவு  நிருபர் சகா
பாடசாலை சூழலை சுத்தமாகவும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை முற்றாக அகற்றி கற்றலுக்கான சூழலை அதிபர்கள் ஏற்படுத்த வேண்டும் . தவறின் பிரதேச சுகாதார அதிகாரி குழு மூலம் டெங்கு பரவக்கூடிய இடம் அடையாளம் காணப்படின் அதற்கான தண்டப் பணத்தை அதிபரது பிரத்தியேக நிதியிலிருந்தே செலுத்த வேண்டிநேரிடும்.
இவ்வாறு சம்மாந்துறை வலய அதிபர் கூட்டத்தில் உரையாற்றிய  வலயக் கல்வி பணிப்பாளர்எம்.எஸ்.சஹூதுல் நஜீம் உத்தரவிட்டார்.
 
சம்மாந்துறை வலய அதிபர் கூட்டம்  வலயக் கல்வி பணிப்பாளர்.சஹூதுல் நஜீம்  தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
 
அவர் அங்கு மேலும் கூறுகையில்:
 
 
பாடசாலை முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன் டிசம்பர் 3031ஆகிய இரு தினங்களில் பெற்றார்களது பங்களிப்புடன் சிரமதானம் மேற்கொண்டு பாடசாலை சூழலை சுத்தமாகவும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை முற்றாக அகற்றி கற்றலுக்கான சூழலை அதிபர்கள் ஏற்படுத்திருக்கவேண்டும் எனவும் தவறின் பிரதேச சுகாதார அதிகாரி குழு மூலம் டெங்கு பரவக்கூடிய இடம் அடையாளம் காணப்படின் அதற்கான தண்டப் பணத்தை அதிபரது பிரத்தியேக நிதியிலிருந்தே செலுத்த வேண்டும்.
 
 மேலும் ஐந்தாண்டு திட்டம்வ ருடாந்த அமுலாக்கல் திட்டம்நே ர அட்டவணைக்கான அனுமதிகளை இதுவரை பெறாத அதிபர்கள் தவணை ஆரம்பிப்பதற்கு முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் . பாடசாலை காலங்களில் நடைபெறும் எந்நிகழ்வாக இருந்தாலும் அரசியல் வார்த்தைப் பிரயோகங்களை எக்காரணம் கொண்டும் பாவித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
 தேர்தல் அறிவிப்புக்கு முன் வழங்கப்பட்ட வருடாந்த இடமாற்றங்கள் அனைத்தும் 01.03.2018 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது . என்று தெரிவித்தார்.
 
பாடசாலை தோட்டப் போட்டியில் நிலைகளைப் பெற்ற பாடசாலை அதிபர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .