திருக்கோனேஸ்வரா ஆலயம் ஆசியாவின் இந்து பக்தர்களின் கேந்திர நிலையமாக ஸ்தாபிக்கப்படும்.ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம

0
471

திருகோணமலை திருக்கோனேஸ்வரா ஆலயம் ஆசியாவின் இந்து பக்தர்களின் கேந்திர நிலையமாக ஸ்தாபிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம  தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலை கோனேஸ்வரா ஆலய நிருவாக சபையின் அழைப்பின்பேரில் விசேட பூஜையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது அதனை தொடர்ந்து கோயில் நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுனருக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின்போதே  ஆமற்கல்டவாறு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தெரிவித்தார்.

ஆசியாவின் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான விசேட நடவடிக்கையாக ஆளுனரின் செயலாளர் ஊடாக குழுவொன்றை அமைக்குமாறும் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது சர்வதேச நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து மத அனுஷ்டானங்கள் விசேட வழிபாடுகள் திருவிழாக்கள் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளுக்கும் விசேடமான ஒழுங்குகளை செய்வதற்கும் இந்து பக்தர்களின் நலன் கருதிய திட்டங்களை முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுனர் இதன்போது சுற்றுலா அபிவிருத்தி சபைக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆசியாவின் இந்து பக்தர்களின் கேந்திர நிலையமாக மாற்றுவதன் ஊடாக தாய்வான் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் மேலும் ஐரோப்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் தங்களது மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு தங்கி நின்று சுதந்திரமாக நாட்களை கழித்து விட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது.  உன்னதமான  சமூக நல்லிணக்கத்துக்கும் அடித்தளமாக மாறுவதற்கும் இதனூடாக அதிக வாய்ப்புக்கள் கிட்டும் எனவும் கிழக்கு ஆளுனர் இக் கலந்துரையாடலில் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி தீப்தி போகொல்லாகம ,கிழக்கு ஆளுனரின் உதவிச் செயலாளர் உதயகுமார் சிவா,ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஏ.எம்.ஹஸன் அலால்தீன் திருக்கோனேஸ்வரா ஆலய நிருவாக சபையின் தலைவர் கனபதிப் பிள்ளை அருள் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.