மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா

0
1171

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா நேற்று(29) வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வினை நடாத்தினர்.
பிரதேச செயலாளர், தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு மட்டங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் சுயம்பு மலரும் வெளியீடு செய்யப்பட்டது.
சுயம்பு மலரின் முதல் பிரதியை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸிடமிருந்து கலைஞர் கலாபூசணம் வே.வல்லிபுரம் பெற்றுக்கொண்டார். நூலிற்கான நயவுரையை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் சு.சந்திரகுமார் நிகழ்த்தினார்.
இதன்போது, நல்லதம்பி மாரிமுத்து, கதிர்காமப்போடி கற்பகம் போன்றோருக்கு கிராமிய கலைச்சுடர் விருதும், பாலிப்போடி இன்பராசாவுக்கு சிறந்த ஊடகவியலாளர் கௌரவமும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம அதிதிகளாக, கலைஞர்களும், சிறப்பு அதிதிகளாக மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான எஸ்.குணரெத்தினம், எஸ்.பிரபாகரன், நிருவாக உத்தியோகத்தர் ரி.துரைராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.