மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடாபில் ஜே.வி.பி கட்சி நூல் ஒன்றை வெளியீடு செய்யவுள்ளது.

0
774
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடாபில் ஜே.வி.பி கட்சி நூல் ஒன்றை வெளியீடு செய்யவுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து இந்த நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் போதல்கள், ஊடகவியலாளர்கள் கொலைகள், பாரியளவிலான ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அம்பலப்படுத்தும் நோக்கில் இந்த கையேடு வடிவிலான நூல் வெளியிடப்படவுள்ளது.
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.
தராதரம் பாராது குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதனையும் அந்த நபர்களின் பதவி நிலைகள் தொடர்பிலும் பற்றியும் இந்த கையேடு வடிவிலான நூலில் குறிப்பிடுவதற்கு ஜே.வி.பி.யின் அரசியல் சபை தீர்மானித்துள்ளது.(JM)