அம்பாறை மாவட்டத்திற்கான சுயதொழில் மேம்பாட்டிற்கான அரிசிமா தயாரிப்பு நிலையத் திறப்பு விழா

0
945

கனடா பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் அனுசரணையில் மக்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  வட கிழக்கு பிரதேசங்களில் அண்மைக்காலமாக பின்தங்கிய பகுதிகளிலுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல வேலைத் திட்டங்களையும் கைத்தொழில் அபிவிருத்திகளையும் செயற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக அம்பாறை மாவட்டத்திற்கான சுயதொழில் மேம்பாட்டிற்கான அரிசிமா தயாரிப்பு நிலையத் திறப்பு விழா நாளை 22.12.2017 ஆம் திகதி நிகழும் மங்களகரமான சுப வேளையில் 03.00 மணிக்கு ஒன்றியத்தின் பணிப்பாளரும் சமாதான நீதவானுமாகிய ஆர்.தில்லைநாயகம் தலைமையில் இல. 39 குவாரி வீதி கல்முனை எனும் விலாசத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகளாக திகாமடுல்ல பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டக்களப்பு பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர்களும் சிறப்பு அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.