கிழக்கில் பல ஊடகவியாலாளர்களும் வேட்பாளர் களத்தில்

0
590

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பல ஊடகவியலாளர்களும் தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக குதித்துள்ளனர்.

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமலை ராஜ்குமார், மற்றும் சி.நவரெத்தினமும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் ஏ.எஸ்.எம்.தானிஸ் ஆகிய ஊடகவியலார்கள் தேர்தலில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சிவம் பாக்கியநாதனும், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் ரி.எல்.ஜெவ்பர்கானும், மக்கள் விடுதலை முன்னணியில் ஜே.எம்.பகத், மற்றும் எச்.எம்.பாத்திமா சர்மிளா ஆகிய ஊடகவியலார்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள இந்நிலையில் மற்றுமொரு ஊடகவியலாளர் உ.உதயகாத் தலைமையில் சுயேட்சையாகவும் போட்டியிருக்கின்றனர். இந்த அணியில் பு.சசிதரன், அ.லியோன்ராஜ் ஆகிய ஊடகவியலாளர்களும் களமிறங்கியுள்ளதாக இதுவரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி தெரியவருகின்றது.