அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் ஒரு பாரிய மாற்றத்திற்கு வித்திடும் – பிரதி அமைச்சர் அமீர் அலி

0
496

கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சேர்ந்தும் இணைந்தும் ஒரு பாரிய அரசியல் மாற்றத்திற்கு நிச்சயம் வித்திடும். மக்கள் அதற்கான ஆணையை வழங்குவார்கள் என்பது எங்களது நம்பிக்கை என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய சபைகளுக்கு வேட்பு மனுக்களை கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று வியாழக்கிழமை பகல் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

நடைபெறப்போகிற உள்ளுராட்சித் தேர்தலில் இலங்கையின் பல மாவட்டங்களில் போட்டியிடுகிறது. பல மாவட்டங்களில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகிறது. அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் சபைகளில் தனித்தும் இணைந்தும் போட்டியிடுகிறோம். அந்த வைகயில் மட்டக்களப்பு மாநகரை சபை, காத்தான்குடி நகர சபை ஆகியவற்றில் தனித்துப் போட்டியிடுகிறது. ஏனைய சபைகளில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தும் போட்டியிடுகிறோம். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் முழுமையாகத் தனித்தும் போட்டியிடுகிறது.

அனைத்து தரப்பினரையும் இணைந்ததாக வேட்பாளர் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்காகப் டீபசுகின்ற கட்சி, மக்கள்மீது நம்பிக்கை கொண்ட கட்சி என்ற அடிப்படையில், மக்கள இதனை ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சேர்ந்தும் இணைந்தும் ஒரு பாரிய அரசியல் மாற்றத்திற்கு நிச்சயம் வித்திடும். மக்கள் அதற்கான ஆணையை வழங்குவார்கள் என்பது எங்களது நம்பிக்கை என்றார்.