குறும்படத்துறைப் போட்டியில் அ.தனுராஜின் எங்கே அப்பா குறும்படம் முதலிடம்

0
930
மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார அதிகார சபையினால் நடத்தப்பட்ட குறும்படத்துறைப் போட்டி 2017க்கு விண்ணப்பித்த 22 குறுந்திரைப்படங்களில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அ.தனுராஜின் எங்கே அப்பா குறும்படம்  சிறந்த படைப்பு, சிறந்த பாடகி, சிறந்த நடிகர்க்கான விருதுகளைப் முதலிடம் பெற்றது.
சிறந்த படைப்பாக தெரிவான மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த தனுராஜின் எங்கே அப்பா தெரிவானது. சிறந்த பாடகி எஸ்.தமிழினி, சிறந்த நடிகராக அ.அனுராஜ் தெரிவாகியுள்ளார். அதே போன்று உனக்கா எனக்கா என்ற குறும்படத்தின் மண்முனை வடக்கைச் சேர்ந்த எம்.பி.ரவிச்சந்திரா தெரிவானார்.
சிறந்த நடிகையாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவனைச் சேர்ந்த விதுரசா வானவில் குறும்படத்தின் பிரதான நடிகை தெரிவானார். சிறந்த துணை நடிகராக ஏறாவு}ர் பற்றிலிருந்து கிடைத்த விவசாயி குறும் படத்தின் ஏ.சிவான்கன் தெரிவானார். சிறந்த துணை நடிகையாக மண்முனை வடிக்கின் செல்லம் குறும்பத்தின் துணை நடிகை சுந்தரமதி வேதநாயகம் தெரிவானார்.
சிறந்த ஒப்பனைக்காக விருதினை உனக்கா எனக்கா குறும்பத்தின் எம்.பி.ரவிச்சந்திரா பெற்றார். சிறந்த நெறியாழ்கைக்காக விவசாயி குறும்பத்தின் சத்திய சீலன் அக்சயன் பெற்றார்.
மரணம் அழைக்கிறது குறும்படத்தின் காந்தன் வேணு சிறந்த எடிட்டிங்க்காக விருது பெற்றார். சர்ப்பங்கள் தீண்டும் பிழைத்துவாழ் குறும்பத்தின் இனையமைப்பாளர் ஜனனி வேலாயுதம்பிள்ளை சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். சிறந்த பாடகராக நண்பா குறும்படத்தின் கே.சிவாஸ்கர் தெரிவானார்.
சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஏன் இந்த இடைவெளி குறும்பத்தின் பிரதீப் சர்வேஷ் தெரிவானார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறும்படத்துறையை ஊக்குவித்தலும் அதன் மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்துறையை மேம்படுத்துதலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார அதிகார சபையினால் குறும்படத்துறை விருதுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளம் படைப்பாளிகளின் தங்களது திறன்களை இத்துறையில் வெளிக்காட்டிவரும் சூழலில் அவர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவப்பதோடு இத்துறையினூடாக இளம் தலைமுறையினர் தனது வாழ்வாதாரத்திற்கான துறையாக இத்துறையை பயன்படுத்திக் கொள்வதற்கான வலுவூட்டல்களையும் வாய்ப்புக்களையும் வழங்க வேண்டிய தேவையுள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபையின் செயலாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தெரிவித்தார்.