குளுவினமடு சிறுவர்களுக்கு பாதுகாப்பான கிராமம்.

0
899

(படுவான் பாலகன்) “சிறுவர்களுக்கு பாதுகாப்பான கிராமம்” எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டத்தில் குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவு மாதிரி கிராமமாக தெரிவுசெய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் அண்மையில் நடாத்தப்பட்டன.
சிறுவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அடிப்படையில் தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபையும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
பிரதேசசெயலாளர் தெட்சணகௌரி தினேஷ்ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் இலக்கு கிராம வரைபடம் தயாரித்தல், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கான விழிப்புணர்வு, ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சித்திரம் வரைதல் நிகழ்வு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, பெற்றோருக்கான விழிப்புணர்வு, அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் என பல செயற்றிட்டங்கள் கிராமம் சார்ந்து முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதனை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ.குகராஜ், ஒழுங்கமைப்பில் கீழ் சமூகசேவை உத்தியோகத்தர், முன்  பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய நிலைய உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் இச்செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்;டது.