நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் – மக்களே உசார்

0
614

நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாகவும் இது தொடர்பில் பல்வேறு அமைப்புகளின் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு செயற்படுவோரைக் கைது செய்வதற்கு பொலிஸ் திணைக்களத்தின் உதவியை நாடவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வைத்தியர்கள், தனியார் வைத்திய நிலையங்களை நடத்துவார்களேயானால் அவை, பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். எனினும் பதிவு செய்யப்படாத வைத்திய நிலையங்களிலேயே போலி வைத்தியர்கள் பெரும்பாலும் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.