வாக்களிப்பதாக இருந்தால் வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் என் கண்முன்னே நிறுத்தி சுமார் 10 கேள்விகளை கேட்பேன்.

0
564

எமது நாட்டில்   அரசியல் என்பது பொதுவாக  மிகவும் சுயநலம் மிக்கதாகவே இருக்கிறது. அவ்வாறான பாதையலேயே நாடு நகர்ந்துகொண்டிருக்கிறதா ? என்ற பெரிய கேள்வி  எமக்கு எழுகின்றது. என மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சிரோஸ்ர சட்டத்தரணி வண பிதா சி.யோகேஸ்வரன் குறிப்பிட்டார். இன்று (13.12)காலை  திருகோணமலை  மனித உரிமைக்கும் பாதுகாப்பிற்குமான நிலயத்தில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குளுவின் பிராந்திய இணைப்பாளர் செல்வி குகதாஸன் அவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். அவர் தொடர்ந்தும்இங்கு  பேசுகையில்

என்னுடைய சுயநலம் எனது மக்களின் பிரச்சனைகளோ அல்லது மனித உரிமைகள் விடயங்களையோ விட மிகமிக முக்கியமானதாக மாறிக்கொண்டு வருகிறது.

எமது நாடு எவ்வாறு மனித உரிமைகளை, இனங்களை, மற்றும் மதங்களை மதிக்கின்ற நாடாக  எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது என்பதனை சிந்திக்க வேண்டிய கட்டத்தில் நாம் அனைவரும்  இருக்கின்றோம்.

.இதுபற்றிச்சிந்திக்கின்ற போது நாம் மிக முக்கியமாக ஒருவிடயத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும.;

அதாவது நமது நாடு மனித உரிமைகளை மதிக்கின்ற நாடாக மாறவேண்டுமாக இருந்தால்,  வரும்  தேர்தல்களில் தெரிவு செய்யப்படும்  எமது மக்கள் பிரதிநிதிகள் எமது பிரச்சனைகள் பற்றி குரல்கொடுப்பவர்களாக.அதற்காக செயற்படுபவர்களாக  இருக்க வேண்டும்.

இதன்பின்னணியில் நாம் ஆரம்ப கட்டத்தில்  ஓரு விடயத்தைப்பற்றி  நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

அதாவது தேர்தல் வந்து விட்டது.முதலில் உள்ளூராட்சி மன்றத்தித்தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பின்னர் மாகாண சபைத்தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

எந்த இனமாக விருந்தாலும் சரி நாட்டின் நலன் கருதி செயற்படுபவர்களாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும்.அவ்வாறு தெரிவு செய்யப்படும்போதுதான் நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்.

தேர்தல்கள் வந்தவுடன் நாம் வாக்களிக்கப்போகின்றோம் என்பது பற்றி நாங்கள்  சிந்திக்க வேண்டும்.நாங்கள் வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிக்கப்போகின்றோம் என சிந்திக்க வேண்டும்

நான் தற்காலத்தில் வாக்களிப்பதாக இருந்தால் வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் என் கண்முன்னே நிறுத்தி  ஒரு ஆய்வைச்செய்ய வேண்டும் என யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

முதலில் நான் வாக்களிக்க இருக்கும் கட்சி கொள்கையுடையதாக இருக்கிறதா என நான் சிந்திப்பேன.; பின்னர் வாக்கு பெற வரும் அபெட்சகர்கள் பற்றி. ஆய்வொன்றை மனத்தில் நிறுத்தி ஆய்வுக்குட்படுத்துவேன்  அதில் நான் சுமார் 10 கேள்விகளை நான் கேட்பேன்.

குறித்த வேட்பாளர் கடந்தகாலங்களில்  இந்த சமூகத்திற்கு என்ன செய்திருக்கின்றார். இம்முறை தொகுதி வாரியாக  முதலில் இடம்பெறுவதனால் எங்களுக்கு தெரிந்த முகம்தான் வரும் பின்னர்தான் பிரதிநிதிதுவம் தெரிவு நடைபெறும்.

அவர் கடந்த காலத்தில் எதுவும் செய்யாவிட்டாலும் எதிர்காலத்தில்மற்றும் நிகழ்காலத்தில் எதனைச் செய்யவதற்கான வாக்குறுதிகளை தருகின்றார்.

குறித்த வேட்பாளருக்கு தனது சமூகம் சார்ந்த பிரச்சனைகளும்  மற்றும்  நாட்டு நடப்பில் உள்ள பிரச்சனைகளும் தெளிவாக தெரிந்திருக்கின்றதா?.

அல்லுதுசமூகத்தின் பிரச்சனைகளை புரிந்துவைத்திருக்கிறாரா? அவருக்கு தெளிவான ஒழுக்ககோட்பாடு இருக்கின்றதா?  பொதுமக்களுடன் இவர்கள் நட்புறவுடன் பழக வல்லவர்களா?  இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுங்கின்றாரா?  சுமூகம் சார்ந்த விடயத்தோடு எவ்வளவு ஆர்வத்தோடு அவர் கடந்த காலத்தில் செயற்பட்டுள்ளார்.

என இவ்வாறு அவரைச்சுற்றிய பலவிடயங்களை நாம் ஆராயும்வகையில்  நான் ஆய்வுகளைச்செய்ய வேண்டும் என யோசிக்கின்றேன்.

இவ்வாறு தான் நாம் இந்த தேர்தல்களிலம் செயற்படுதல் வேண்டும் இல்லாத விடயத்து நாம் எமது மனித உரிமைகள் விடயங்களை பாதகாக்கவல்லவர்களை தெரிவு செய்யமுடியாது பொகலாம்.எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.