பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

0
545

இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மட்டக்கள்பபு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இளைஞர் சேவை மன்றத்தின் தொழில் பயிற்சி நிலையம், மற்றும் சாய்ந்தமருது இளைஞர்சேவை மன்ற பயிற்சி நிலையம் என்பவற்றில் கடந்த 2017 தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரையான ஆறு (6) மாத காலத்திற்கு தொழில் கல்வியினை பெற்றுள்ள மாணவர்களுக்கு கிரான்குளம் சீன்மூன் விடுதியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு தொழில்பயிற்சி நிலையத்தில் சிங்கள மொழி (பகுதிநேரம்), ஆங்கில மொழி (பகுதி நேரம்), அழகுகலை (முழுநேரம்), கணணிகல்வி (முழுநேரம்) ஆகிய பயிற்சிகளை பெற்ற 105 மாணவர்களுக்கும், சாய்ந்தமருது இளைஞர்சேவை நிலையத்தில் முழுநேர ஆங்கில கல்வியினை நிறைவு செய்த 65 மாணவர்களுக்கு; இசான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு இளைஞர்சேவை மன்ற தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளர் திரு.நா.குகதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் திணைக்கள பணிப்பாளர் சிசரகுமார, முன்னாள் கிழக்கு மாகாண இளைஞர் சேவை பணிப்பாளர் பொன் செல்வராசாமட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை பணிப்பாளர் A.கமீம், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர் இதன் போது மாணவர்களின் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.