கூத்துக்கலைஞர் ஒருவரின் சிலையை மட்டக்களப்பில் நிறுவுவதற்கு எண்ணியுள்ளேன்

0
816

இலங்கையில் கலைகளுக்கு மிகவும் பெயர் போன மாவட்டமாக மட்டக்களப்பு விளங்குகிறது. இதனைக் கௌரவிக்கும் முகமாக கூத்துக்கலைஞர் ஒருவரின் சிலையை மட்டக்களப்பில் நிறுவுவதற்கு எண்ணியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் நடன விழா திங்கட்கிழமை (04) மாலை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசியப்பாடசாலையில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்,

மட்டக்களப்பு மாநகர சபை கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க எந்நேரத்திலும் தயாராகவே உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றும் வருகின்றன. கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளையே கலை நிழ்வுகளில் காண முடிந்திருக்கிறது. முதல் முதலாக ஆசிரியர்களின் கலை நிக்வுகளைக் கண்டு கழிக்க ஒரு வாய்ப்புக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியாகும்.

இலங்கையில் கலைகளுக்கு மிகவும் பெயர் போன மாவட்டமாக மட்டக்களப்பு விளங்குகிறது. கூத்துக் கலையை கௌரவிக்கும் முகமாக கூத்துக்கலைஞர் ஒருவரின் சிலையை மட்டக்களப்பில் நிறுவுவதற்கு எண்ணியுள்ளேன். அதற்குப் பொருத்தமான இடம் ஒன்றை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

இவ்விழாவில் அஸம்யுத ஸம்யுத ஹஸ்த விநியோகப் போட்டிக்கான விருது வழங்கல், கலைஞர் கௌரவிப்பு, மாணவர்கள், ஆசிரியர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இப்போட்டியில், மட்டக்களப்பு வலயத்தில் தரம் 6 முதல் தரம் 13 வரை நடனம் கற்கும் 1283 மாணவர்கள் போட்டியில் பங்குபற்றினர்;. இப்போட்டியானது 1ஏ.பி தர பாடசாலைகளுக்கு வேறாகவும், 1சி, வகை இரண்டைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு வேறாகவும் நடாத்தப்பட்டது. ஓவ்வொரு தரத்திற்கும் எழுத்துப் பரீட்சை, செயன்முறைப் பரீட்சை என்பன வெவ்வேறாக நடாத்தப்பட்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு வலய நடன ஆசிரிய ஆலோசகர் திருமதி. மலர்விழி சிவஞானசோதிகுருவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கணக்காளர்; திருமதி. புஸ்பகாந்தி சுகிஸ்வரன், சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை திருக்கோவில் வலய அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர்; கலாபூசணம் திருமதி. இராஜகுமாரி சிதம்பரம், ஓய்வுநிலை கல்குடா வலய அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர்; கலாவித்தகர் திருமதி. கமலேஸ்வரி தவராஜரட்ணம். ஓய்வுநிலை மட்டக்களப்பு வலய நடன ஆசிரியை கலாபூசணம் திருமதி உஷாதேவி கனகசுந்தரம் அவர்களும் கலந்துகொண்டனர்.