தற்பொழுது நிலவி வரும் அசாதாரண வானிலையின் போக்கு

0
562

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்க மையம் சூறாவளியாக விருத்தியடைந்து இலங்கைக்குக் கிழக்கே சுமார் 800 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நிலைகொண்டுள்ளது.
இந்தச் சூறாவளி இலங்கையை தாக்குவதற்கான வாய்ப்புகள் எதிர்வு கூறப்படுகின்ற போதும், அதனுடைய விருத்தி மற்றும் நகர்வுப் பாங்கினை வைத்து நோக்குகின்ற பொழுது தற்பொழுது நிலைகொண்டிருக்கின்ற மையத்தில் இருந்து வடமேற்காக நகர்ந்து இந்தியாவின் விசாகா பட்டினத்தை சென்றடைவதற்கான வாய்பே காணப்படுகின்றது. இன்று நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அதன் போக்கை செய்மதித் தரவுகளின் அடிப்படையில் “ஐnஆநவநழ” இனால் எதிர்வுகூறப்பட்ட படங்களின் மூலம் அவதானிக்கலாம். அவ்வாறு நகர்ந்து செல்லுகின்ற பொழுது இலங்கையில் குறிப்பாக தெற்கு, கிழக்கு வடக்கு பிராந்தியங்களில் சாதாரண காற்றுடன் கூடிய மழை பொழிவுக்கான வாய்புகள் ஆங்காங்கே காணப்படும். ஆகவே பொது மக்கள் சூறாவளித் தாக்கம் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. மனதைத் திடப்படுத்திக்கொள்வதோடு, மழை, காற்று, குளிர் போன்ற அசாதாரண வானிலை நிலவுகின்ற இவ்வேளைகளில் தமது அன்றாட வாழ்வுக்கு தேவையான உணவுகள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை பேணி வைத்துக்கொள்ளவது அவசியமானதாகும். வானிலை என்பது குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் நிலவும் வளிமண்டலத்தின் பிரதிபலிப்பு ஆகும். அதற்கமைய தொடர்ச்சியான அவதானித்து சரியான தகவல்களை வழங்குவதன் மூலம் மக்களை பீதியற்ற வகையில் வழிப்படுத்த முடியும்.
தகவல்: கிருபா இராஜரெட்ணம்.
சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.