அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே  அதிக பட்ச தண்டனைக்குரியவர்கள்

0
478

இன்றைய தினம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள், வெளிநாட்டுவேலைவாய்ப்பு,  ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துகளையும்தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த கால யுத்தமானது எமது நாட்டில், ஏற்படுத்திச் சென்றுள்ள ஆழமான வடுக்கள் ஏராளம். இதன் தாக்கங்களிலிருந்து எமதுவடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பெரும்பாலான மக்கள் இன்னமும் முழுமையாக மீளாத நிலையிலேயே இருந்துவருகின்றனர். அதிலும், குறிப்பாக பெண்களின் நிலைமையானது, மிகவும் பாரதூரமான மட்டங்களில் காணப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் பெண்களும், கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்களும் குடும்பத் தலைமைகளை ஏற்கும்நிலையில் இருப்பதாகத் தெரிய வருகின்றது. அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையின் பிரகாரம் இத்தொகைக்கூறப்பட்டாலும், பதிவு செய்யாதவர்கள் இன்னும் இருக்கலாம்.

இன்று, வடக்கு மாகாணத்திலே தற்கொலைக்கு முயற்சிப்போர்களது எண்ணிக்கை வருடத்திற்கு 1000தைத் தாண்டுகின்றது.இத்தகைய முயற்சிகளினால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 400ஐயும் தாண்டுவதாகவே தெரியவருகின்றது. இத்தகைய தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவேஇருக்கின்றனர்.

கடுமையான மன அழுத்தங்கள், இளையோர் முரண்பாடுகள், குடும்பத்தகராறு போன்ற காரணங்களும், அதிகளவில் வறுமைநிலையின் காரணமுமே இவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன.

இந்த மக்களை வாழ்க்கையின்பால் மீட்டெடுப்பதற்கென மத்திய அரசிடமோ, மாகாண அரசிடமோ உரிய வகையிலானதிட்டங்கள் எதுவுமற்ற நிலையிலேயே இந்த நிலை தொடர்கின்றது. இதனை நன்கறிந்து கொண்டுள்ள சில நுண் கடன்நிறுவனங்கள் எமது மக்களை – குறிப்பாக வறுமை நிலை மிகக் கொண்ட குடும்பத் தலைமைத்துவம் கொண்ட பெண்களைகுறிவைத்து, விரட்டி, விரட்டி கடன் கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களை மிரட்டி, மிரட்டி அவர்களிடம் மிச்சம், மீதிஇருப்பவற்றையும், இறுதியில்  அவர்களது வாழ்க்கையையுமே பறித்தெடுக்கின்ற நிலைமைகள் தொடர்கின்றன.

இதற்கிடையில், பால்நிலை சார் வன்முறைகள் திணிக்கப்படுகின்றன. சமூகம்  சார்ந்த புறக்கணிப்புகள் தொடர்கின்றன.சமூகப் பாதுகாப்பு இல்லை. உரிய உதவிகள் இல்லை. சமூக வழிகாட்டல்கள் இல்லை. உழைப்பிற்கு வழி இல்லை. உழைத்தாலும்உழைப்பிற்கேற்ற ஊதியங்கள் இல்லை.

காணிகளையும், வளங்களையும், கடலையும் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, ஆண் துணைகளற்ற நிலையில்குடும்பத்தின் தலைமையை ஏற்று வாழச் சொன்னால், இந்தப் பெண்கள் வாழ்வதற்கு எங்கே போவார்கள்? எனவே, இறுதியில்தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். முழுக் குடும்பத்தையும் சேர்த்து தற்கொலைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதுதவறு என உணர்த்துவதற்குகு; கூட எமது சமூகத்தில் எவ்விதமான ஏற்பாடுகளும் போதியளவில் இன்றிய நிலையேகாணப்படுகின்றது.

இந்த நிலைமையினைக் கருத்தில் கொண்டுதான், யுத்தம் காரணமாகப் பெரிதும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ள எமது பெண்களின்வாழ்வாதாரங்களை மீளக் கட்டியழுப்பும் நோக்கில் வலுமிக்கதான விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன்அவசியத்தினை தொடர்ந்தும் நான் வலியுறுத்தி வருகின்றேன்.

குடும்பத்திற்கு ஐந்தாறு கோழிகளும், ஒன்றிரண்டு ஆடுகளும் கொடுத்துவிட்டால் போதும், அவர்களது வார்வாதாரங்கள்செழித்துவிடும் என எண்ணிக் கொண்டு, அத்தகைய திட்டங்களை மாத்திரம் செயற்படுத்திக் கொண்டிருந்தால், அத்தகையதிட்டங்களால் ஒருபோதும் எமது மக்களது பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

தேர்தல் காலங்களில்; பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதால் மாத்திரம் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று இத்தகைய நிலை இருந்திருக்காது.

எனவே, விசேட திட்டங்களே அவர்களது பொருளாதார இடைவெளியை நிரப்பும் என்பதை ஆய்வுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். இத்தகைய குடும்பங்கள் ஒவ்வொன்றும் சுதந்திரமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.அதனடிப்படையில் அக் குடும்பங்கள் போதியளவு வாழ்வாதாரங்களை ஈட்டக்கூடியதான வாய்ப்புகளை, அவர்களுக்குஇருக்கக்கூடிய ஆற்றல்கள், திறன்கள் மற்றும் அவர்களுக்கு இலகுவில் கிட்டக்கூடிய வளங்கள், சந்தைக்கான கேள்விகள்போன்றவை அடிப்படையில் இனங்காணப்பட்டு. அதற்குரிய உதவிகளை மானிய ரீதியிலும், இலகுக் கடன் அடிப்படையிலும்வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டதாக மேற்படி விசேட திட்டங்கள் அமையப்பெற வேண்டும்.

அதே நேரம், புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் புலிகள் இயக்கத்தின் பெண் உறுப்பினர்கள் போதியளவு வாழ்வாதாரங்களும்இன்றிய நிலையில், சமூக ஏற்புகளும் குறைந்த நிலையில், கைவிடப்பட்டதொரு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைபொருளாதார ரீதியிலும், சமூக மட்டத்து மேம்பாட்டு ரீதியிலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தது, சிறுவர்கள் மீதான அக்கறையின்மை என்பது எமது சமூகத்தில் அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது.பாடசாலைகளில் இடை விலகல்களின் அதிகரிப்பும் காணப்படுகின்றது. பல்வேறு சமூக முறைகேடுகளுக்கு இவர்களைப்பயன்படுத்தகின்ற நிலைகளும் இல்லாமல் இல்லை. அதே நேரம், சிறுவர் துஸ்பிரயோகங்களும் இலங்கையில் யாழ்மாவட்டத்திலேயே அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த நிலை பொதுவாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில்அதிகரித்தும், நிலைப்படுத்தப்பட்டுள்ளதுமான ஒரு நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியாவுக்கு நடந்த கொடூரம், இனிமேல் இந்த நாட்டில் எங்குமே நடக்கக்கூடாது எனநாங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஒரு சிறுமி பாலியல் சார்ந்தவன்முறைக்கு உட்படுத்;தப்பட்டுள்ளார். இத்தகைய சிறுமிகள் மீதான பாலியல் சார்ந்த வன்முறைகளில்ஈடுபடுகின்றவர்களுக்கும், படுகொலைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு பொறுப்பான பதவிநிலைகளில் இருப்பவர்களே – அதுவும் பெண்களே – துணை போகின்ற துர்ப்பாக்கிய நிலைமைகளும் வடக்கில் இல்லாமல்இல்லை. வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? இத்தகையவர்களுக்கு எதிராக சட்டம்கைட்டிக் கொண்டிருப்பது ஏன்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே  அதிக பட்சதண்டனைக்குரிய குற்றவாளிகள்.

வித்தியாவை பாலியல் சார் வன்முறைக்கு உட்படுத்தி, படுகொலை செய்தோருக்கு இன்று நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன்.

ஆனாலும்,.. குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தவர்களை சட்டம் இன்னும் தண்டிக்கவில்லை. அவர்கள்  இன்னமும்சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் அவர்களே இருந்துகொண்டு, தமது குற்றங்களை மறைப்பற்காக,…தமக்கு அதிகாரத்தை வழங்கிய அதேஅரசாங்கத்தை பார்த்து இந்த அரசாங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று போலி வேடம் போட்டு போர்க்கொடிதூக்குகிறார்கள்.

அன்று யாழில் கிருசாந்தி, புங்குடுதீவில் சாரதாம்பாள், கிழக்கில் கோனேஸ்வரி,…இவர்கள் எல்லாம் கசக்கி எறியப்பட்டுகொடூரமாக பலி கொல்லப்பட்டார்கள். அதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினோம். அம்பலப்படுத்தினோம். குற்றவாளிகளைதண்டனைகளுக்கு உட்படுத்தினோம். முடிந்தளவு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தினோம்.அப்போதெல்லாம் இவர்கள் எங்கே இருந்தார்கள்?…

இந்த மண்ணில் ஒரு உரிமைப்போராட்டம் நடந்தது. அதில் நானும் ஒரு சுதந்திர போராட்டத்தையே வழி நடத்தி சென்றவன்.

சனத்தொகையில் சரி பாதி மக்கள் அடுப்பங்கரையில் வாழும் வரை     விடுதலை என்பது சாத்தியமில்லை என்று பெண்கள்சமூகத்தை நோக்கி எமது போராட்ட வரலாற்றின் ஆரம்பத்திலேயே முதன் முதலில் அறை கூவல் விடுத்தவர்கள் நாங்கள்.

ஆண்களுக்கு நிகராக பெண்களையும் தமது உரிமைக்காகாக போராட்டக்களத்தில் முதன் முதலில் கொண்டு வந்துநிறுத்தியவர்கள் நாங்கள்.

அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம் என்று உறுதி கொண்டு எமது பெண்கள்சமூகம் எழுந்து வந்தது வெறும் தேச விடுதலைக்காக மட்டுமல்ல, பெண்களின் உரிமைக்காகவுமே அவர்கள் எழுச்சியுற்றுவந்தார்கள். ஆனாலும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் எமது போராட்டத்தின் வழிமுறையைமாற்றிக்கொண்டவர்கள் நாங்கள். காலம் மாறலாம், சூழல் மாறலாம், அதற்கு இசைவாக போராட்ட வடிவங்களும் மாறலாம்.

ஆனாலும்,. அன்று நாம் கனவு கண்ட பெண்கள் சமூகத்தின் இலட்சிய நோக்கு இன்னும் மாறவில்லை. தமிழ் பேசும் மக்களின்இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை. அரசியல் அதிகாரங்களை பெறுவதன் ஊடாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றும்,… பெண்கள் சமூகத்தின் உரிமைகளை பெற்றுவிடமுடியும் எம்றும்,.. நம்பிக்கை கொண்டு எமது உரிமை நோக்கிய பயணத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றோம்.

பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும். அவர்களுக்கான சமூக ஒடுக்குமுறைகள் உடைக்கப்பட வேண்டும்.பெண்களுக்கான சமவுரிமை காணப்பட வேண்டும். பெண்கள் சமூகம் சுமக்கும் குடும்ப சுமைகளில் இருந்து விடுபட வேண்டும்.

தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீடு 25 வீதத்திற்கு அப்பால் சென்று ஐம்பதிற்கு ஐம்பது வீதம் பெண்களின் உறுப்புரிமை இருக்கவேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரம் வளம்பெற வேண்டும்.

 

அந்த வகையில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்கள், இம்முறை வரவு –செலவுத் திட்டத்தில் அவரது அமைச்சுக்கு, மேலே குறிப்பிட்டுள்ள வாழ்வாதார உதவிகளுக்கான நிதிஒதுக்கப்பட்டிருக்காதவிடத்தும்;, இதற்கான திட்டங்களை வகுத்தும், அதே நேரம் ஆற்றுப்படுத்துகை, சமூக விழிப்புணர்வுகளைஏற்படுத்தல், சமூக வழிகாட்டல்களை மேற்படி பெண்கள் மத்தியில் ஏற்படுத்தல் போன்ற திட்டங்களை வகுத்தும், அதற்கான நிதிமூலங்களைப் பெற்றும், எமது மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதில் மேற்படி அமைச்சுக்கு உதவ வேண்டும் என்பதையும்வலியுறுத்த விரும்புகின்றேன்.

மேலும், எமது நாட்டின் தொழில்வாய்ப்பு ஆளணிப் படையில் பெண்களின் பங்களிப்பு தற்போதைய நிலையில்குறைந்துள்ளதாகவே உலக வங்கியின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், 2010ஆம் ஆண்டில்41 வீதமாக இருந்துள்ள தொழில்வாய்ப்பு ஆளணிப் படையிலான  பெண்களிப்பு பங்களிப்பானது, 2016ஆம் ஆண்டில் 36 வீதமாகவீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. குறிப்பாக, இளைய பராயத்தினர் வேலைவாய்ப்புகளில் பங்களிப்பு நல்குவதற்குஅதிக விருப்பம் காட்டாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

எமது நாட்டில் தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம், வர்த்தகம், விவசாயத்துறை போன்றவற்றில் பெண்களை பணிக்குஅமர்த்துவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் மேற்படி அறிக்கை குறிப்படுகின்றது.

அதே நேரம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தனியார் வர்த்தக நிலையங்களில் பணிபுரிகின்ற பெண்கள்பலரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை வடக்கு மாகாணத்திலும்காணப்படுகின்றது. ஆண்கள் மேற்கொள்ள வேண்டியப் பணிகளில்கூட, குறைந்த ஊதியம் கருதி பெண்களை ஈடுபடுத்துகின்றநிலைமைகள் வடக்கு மாகாணத்திலும் காணப்படுகின்றன. இதே நிலை நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் நிலவ முடியும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் கௌரவ அமைச்சர் சந்திராணி பண்டார அவர்கள் தொழில் அமைச்சுடன் இணைந்து உரியஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். கௌரவ அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களதுசெயற்பாடுகள் நம்பிக்கை தருவதாகவே அமைந்து வருவதையும் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.

இத்தகைய வறுமை நிலைக்குள்ளும், சமூகப் பாதுகாப்பற்ற நிலைமைக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள எமது பெண்கள் உள்ளிட்டமக்களுக்கு வலுவூட்டக்கூடிய ஏற்பாடுகள் அவசியமாகின்றது. அதற்கென சமூக வலுவூட்டல், சமூக நலன்புரி மற்றும் மலையகமரபுரிமைகள் தொடர்பான அமைச்சினை எடுத்துக் கொண்டால், எமது மக்களுக்கு தற்போது இருக்கின்ற நிவாரணமானசமுர்த்தி நிவாரணம்கூட மறுக்கப்படுகின்ற நிலைமைகளே தோன்றியிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில், கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகமுல்லைத்தீவு மாவட்டமே விளங்குகின்றது. இங்கு 2011ஆம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்டவர்களின் தரவுகளின் அடிப்படையில், 2012ஆம் ஆண்டு சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு சமுர்த்திநிவாரணம் வழங்கப்படவில்லை. அந்த வகையில் 2012ஆம் வருட இறுதியில் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள 24 கிராமசேவையாளர்கள் பிரிவுகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்;கப்படவில்லை. மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்திகொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்த 11 ஆயிரம் பேரிலிருந்து 1600 பேருக்கான சமுர்த்தி உதவிகள் கடந்த ஜூலை மாதம் முதல்நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இந்த 1600 பேருக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் எந்த அடிப்படையில் நிறுத்தப்பட்டன? என்பதை தனது உரையின்போதுகௌரவ அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த வகையில், மேற்படி 1600 பேருக்கும் சேர்த்து சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படாதுள்ள 24 கிராம சேவையாளர்கள்பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கும் என்ற வகையில் 12 ஆயிரத்து 218 குடும்பங்களுக்கு  முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்திகொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இதே நிலைமையே வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகமாக நிலவுகின்றன. இந்த மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு பிரதேசசெயலாளர் பிரிவுகளை எடுத்துக் கொண்டாலும் இந்த நிலையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

சமுர்த்தி நிவாரண உதவிகளைக் குறைப்;பது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதனை யுத்தம் காரணமாகநேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டு, இன்னமும் அதிலிருந்து முழுமையாக மீள முடியாதுள்ள வடக்கு – கிழக்குப் பகுதிகளில்அதனை பரீட்சித்துப் பார்க்கக் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது மக்கள் தொடர்ந்தும் நிவாரணங்களிலும், சலுகைளிலிலும், மானியங்களிலும் தங்கியிருந்து வாழ வேண்டியத் தேவைகள்இல்லை. இருந்தும் எமது மக்களை ஏனைய மக்களுடன் பொருளாதார ரீதியில் சமநிலைப் படுத்தும் வரையில், கடந்தகாலயுத்தம் மற்றும் தொடர்ந்த இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய உதவிகள் – இதைவிடஅதிகமாகவே தேவைப்படுகின்றன.

அந்த வகையில், அதிக உதவிகள் அரசாங்கத்தில் இப்போதைக்கு சாத்தியமில்லாவிட்டாலும், குறைந்தபட்ச உதவிகளையும்நிறுத்திவிடக்கூடாது என வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம், எமது மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல்களை மேற்கொள்கின்ற பணிகளிலும் மேற்படிஅமைச்சுக்கு வலுவானதும், பரவலானதும் பங்களிப்பினை வழங்க முடியும் என நினைக்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில்  சமுர்த்தி வேலைத்திட்டத்ததை முன்னெடுப்பதில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வெற்றிடம்பெரும் தடைக்கல்லாக இருக்கிறது. தற்போது புதிய நியமனங்கள் திருப்திகரமான நிலையில் வழங்கப்பட வில்லை என்பதனைஇந்த சபைக்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

அந்த வகையில் யபழ் மாவட்டத்தில் 138 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், 45 நியமனங்களும், கிளிநொச்சிமாவட்டத்தில் 64 வெற்றிடங்கள் நிலவுகின்ற நிலையில் 05 நியமனங்களும், முல்லைத்தீவில் 117 வெற்றிடங்கள் நிலவும் நிலையில், 42 நியமனங்களும், வவுனியாவில் 48 வெற்றிடங்கள் நிலவும் நிலையில், 09 நியமனங்களும், மன்னாரில் 84 வெற்றிடங்கள் நிலவும்நிலையில் 17 நியமனங்களுமே வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கெனரவ அமைச்சர் அவர்கள் உரிய ஏற்பாடுகளைவிரையில் எடுத்து, ஏனைய வெற்றிடங்களையும் நிரப்ப வேண்டும் வேண்டும் எனக் கேட்டக் கொள்கின்றேன்.

 

அத்துடன், தற்போது சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவு பெறுவோர் எண்ணிக்கையானது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 53,372பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 11,588 பேரும், முலi;லத்தீவு மாவட்டத்தில் 11,077 பேரும், வவனியா மாவட்டத்தில் 11,888 பேரும்,மன்னார் மாவட்டத்தில் 13,017 பேரும் என்ற நிலையினைக் கொண்டிருக்கின்றது.

மேலும், யாழ்ப்பாணத்தில் 41,567 பேரும், கிளிநொச்சிமாவட்டத்தில் 13,732 பேரும், மல்லைத்தீவு மாட்த்தில் 12,650 பேரும், வவுனியாமாவட்டத்தில் 12,027 பேரும், மன்னார் மாவட்டத்தில் 14,000 பேரும் சமுர்த்தி நிவாரணத்திற்கென விண்ணப்பித்துள்ளனர் எனத்தெரிய வருகின்றது. இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது விசேட அவதானத்தைச் செலுத்து வேண்டும் என்றும்கேட்டக் கொள்வதுடன்,

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையானது எமது நாட்டுக்கு பொருளாதார ஈட்டல்களைக் கொண்டு தருகின்ற ஒரு துறையாகஇருக்கின்றது. அந்தவகையில், எமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியின் முதன்மையான இடத்தைப் பிடித்திருந்த வெளிநாட்டுவேலைவாய்ப்புத் துறையானது, தற்போதைய நிலையில் சுமார் 15 வீத அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாகவே கூறப்படுகின்றது.

எதிர்காலத்தில் இத்துறையானது மேலும் வீழ்ச்சியடையக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது. ஏனெனில், எமது அயல்நாடான இந்தியா, 2018ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான ஆளணிகளை அனுப்புவதில் தாராளமயப்போக்கினைப் பிரகடனப்படுத்தி இருக்கின்றது.

எனவே, இத்துறை தொடர்பில் கூடிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும், நன்கு பயிற்றப்பட்டவர்களே வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படுவார்கள் என கடந்த வருடம் கௌரவஅமைச்சர் தலதா அத்துக்கோறள அவர்கள் தெரிவித்திருந்ததாக ஞாபகம். அந்த வகையில், தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆளணிகள் அனுப்பப்;படுகின்றதா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

பல காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் செல்கின்ற பலரும் – குறிப்பாக  பெண்கள் பல்வேறு வகையிலானதுன்ப, துயரங்களுக்கு ஆட்பட்டே வருகின்றனர். அண்மைக்காலமாக மலையகப் பெண்கள், தென்பகுதிப் பெண்கள் பலர் இந்தநிலைமைக்கு உட்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகின்ற சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்தொடர்பிலான தகவல்களும் அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்றன. குறிப்பாக கடந்த வருடம் இத்தகைய 61 முகவர்நிலையங்கள் இனங்காணப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் அத்தகைய 67முகவர் நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இத்தகைய போலி முகவர் நிலையங்கள் தொடர்பில்வலுவான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டால் அவை மீண்டும் தலைதூக்க முடியாத நிலை ஏற்படலாம். எனினும், அத்தகையஏற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா? என்ற கேள்வியே எழுகின்றது.

அதே நேரம் சட்டவிரோதமாக வெளிநாடுகளில்  தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பிலும் ஆக்கப்பூர்வமானநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தொழிலானது எமக்கான வேலைவாய்ப்புகளின் கேள்வியைகுறைக்கின்ற அல்லது மறுதலிக்கின்ற நிலைமைகளையும், நாடு தொடர்பான நம்பிக்கையீனங்களையுமே ஏற்படுத்திவருவதாகத் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற வறுமையினைப் பயன்படுத்தி, இளம் பெண்கள் உட்பட இளம் தாய்மார்களை வசீகரித்துவெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புகின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கின்ற தாய்மார்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்பக்கூடாதுஎன்ற சட்டமும், பிரதேச செயலாளர்களின் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே பணிப் பெண்களுக்கான நுழைவிசைவு வழங்கும்நடைமுறையும் இருக்கின்ற நிலையில், பிரதேச செயலாளர்களுக்குத் தெரியாமலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைக்கொண்ட 30 தாய்மார்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளநிலைமைகளும் காணப்படுகின்றன.

அதே நேரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்ற நபர்களது குடும்ப சூழ்நிலைகள் தொடர்பில் மேற்படி அமைச்சுஅவதானமெடுத்து வருகின்ற நிலையில், அத்தகைய அவதானங்கள் மேலும் வினைத்திறனுடையதாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பில் எமது வடக்கு மாகாணமும் அதிகூடிய அவதானத்தைப் பெற வேண்டும்.தற்போதைய நிலையில் வறுமை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கு வெளிநாட்டுவேலைவாய்ப்புத்துறையின் மூலமும் பாரிய பங்களிப்பினை வழங்க முடியும் என்பதால் கௌரவ அமைச்சர் தலதாஅத்துக்கோறள அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ அமைச்சர் தலதா அத்துகோறள அவர்கள் வெளிநாட்டு தொழிற்துறை சார்ந்தும், பணியாளர்கள் சார்ந்தும் காட்டிவருகின்ற அக்கறையை பாராட்ட வேண்டும்.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்தப் போராட்டத்தில் முதலாவது களப் பலியாகிய பெண் போராளி எனதுசகோதரியாவார். அவரையும், அவர் போன்ற பல பெண் போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தச் சந்தர்ப்பத்தில்நினைவுகூறக் கடமைப்பட்டுள்ளேன். அதற்கான தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கின்றது.

இன்று ஒரு சிலர் உயிரிழந்த முன்னாள் போராளிகளை நினைவுகூறுவதாகக் கூறிக் கொண்டு. நாடகமாவடி வருவதையும் இங்குகுறிப்பிட வேண்டும். கடந்த கால பாவங்களை கழுவிக் கொள்வதற்காக இவர்கள் இந்த நாடகங்களில் ஈடுபடுவதுபரிதாபத்திற்குரிய விடயமாகும் என்றாலும், உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதை கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்வாறுகொச்சைப்படுத்தவதன் ஊடாக கடந்தகால பாவங்களுடன், கொச்சைப்படுத்தகின்ற பாவமும் சேர்ந்துவிட்டால் பிறகு எந்தச்சமுதாயத்திலும் அவர்களுக்கு பாவ மன்னிப்பே கிடைக்காது. எனவே, செய்த பாவங்களை எண்ணி இவர்கள் இப்போதாவதுதிருந்த முன்வருவதே எமது மக்களுக்கு அவர்கள் செய்கின்ற பேருதவியாக அமையும் என்பதையும் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே  அதிக பட்சதண்டனைக்குரிய குற்றவாளிகள்.

வித்தியா என்ற ஒரு நறுமலரை கசக்கி பிழிந்து சாகடித்தவர்களுக்கு இன்று நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அதை நான்வரவேற்கிறேன்.

ஆனாலும்.. குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தவர்களை சட்டம் இன்னும் தண்டிக்கவில்லை. அவர்கள்  இன்னமும்சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.  அதிகாரத்தில் அவர்களே இருந்து கொண்டு தமது குற்றங்களை மூடி  மறைப்பற்காக… தமக்குஅதிகாரத்தை வழங்கிய அதே அரசாங்கத்தை பார்த்து  இந்த அரசாங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று போலிவேஷம் போட்டு போர்க்கொடி தூக்குக்கிரார்கள். அரசாங்கத்தை நோக்கி இவர்கள் சுட்டு விரலை மட்டும் நீட்டுகிறார்கள்.

ஆனாலும் அதிகாரத்தில் இருக்கும் இவர்களை நோக்கியே ஏனைய நான்கு விரல்களும் நீள்கின்றன.அன்று யாழில் கிருசாந்திபுங்குடுதீவில் சாரதாம்பாள் கிழக்கில் கோணோஸ்வரி…

இவர்கள் எல்லாம் கசக்கி எறியப்பட்டு கொடூரமாக பலி கொல்லப்பட்டார்கள். அதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பினோம்.

அம்பலப்படுத்தினோம். முடிந்தளவு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்தினோம்.

அப்போதெல்லாம் இவர்கள் எங்கே இருந்தார்கள்?…சொந்த மண்ணில் எமது மக்கள் சுததிரமாக வாழஉழைத்துக்கொண்டிருந்தார்களா?.. இல்லவே இல்லை. மாறாக தமது சுக போகங்களுக்காக வியாபாரம் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தார்கள்.

கெளரவ சபாயாகர் அவர்களே!…

இந்த மண்ணில் ஒரு உரிமைப்போராட்டம் நடந்தது. அதில் நானும் ஒரு சுதந்திர போராட்டத்தையே வழி நடத்தி சென்றவன்.சனத்தொகையில் சரி பாதி மக்கள் அடுப்பங்கரையில் வாழும் வரை விடுதலை என்பது சாத்தியமில்லை என்று பெண்கள்சமூகத்தை நோக்கி முதன்முதலில் அறை கூவல் விடுத்தவர்கள் நாங்கள். ஆண்களுக்கு நிகராக பெண்களையும் தமதுஉரிமைக்காகாக போராட்டக்களத்தில் முதன் முதலில் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் நாங்கள். அடுப்போடு வாழ்ந்தநெப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம் என்று உறுதி கொண்டு எமது பெண்கள் சமூகம் எழுந்து வந்ததுவெறும் தேச விடுதலைக்காக மட்டுமல்ல பெண்களின் உரிமைக்காகவுமே அவர்கள் எழுச்சியுற்று வந்தார்கள்.

ஆனாலும் இலங்கை இந்திய ஒப்பந்ததிற்கு பின்னர் எமது போராட்டத்தின் வழிமுறையை மாற்றிக்கொண்டவர்கள் நாங்கள்.

காலம் மாறலாம் சூழல் மாறலாம் அதற்கு இசைவாக போராட்ட வடிவங்களும் மாறலாம். ஆனாலும். அன்று நாம் கனவு கண்டபெண்கள் சமூகத்தின் இலட்சிய நோக்கு இன்னும் மாறவில்லை. தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்தஎமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை.அரசியல் அதிகாரங்களை பெறுவதின் ஊடாக ஒட்டு மொத்த தமிழ்

பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்றும்…

பெண்கள் சமூகத்தின் உரிமைகளை பெற்றுவிட முடியும் எம்றும்..

நம்பிக்கை கொண்டு எமது உரிமை நோக்கிய பயணத்தை உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றோம்.

பெண்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும். அவர்களுக்கான சமூக ஒடுக்குமுறைகள் உடைக்கப்பட வேண்டும்.பெண்களுக்கான சமவுரிமை காணப்பட வேண்டும். பெண்கள் சமூகம் சுமக்கும் குடும்ப சுமைகளில் இருந்து விடுபடவேண்டும்.தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீடு 25 வீதத்திற்கு அப்பால் சென்று  ஐம்பதிற்கு ஐம்பதிற்கு வீதம் பெண்களின்உறுப்புரிமை இருக்க வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரம் வளம்பெற வேண்டும்.