வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கையை நிராகரித்த கிழக்கு மாகாண ஆளுநர்

0
681

ஆசிரியர் நியமனங்களில் தாம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நேற்று மாலை 1.00 மணிதொடக்கம் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1119 ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டுத்திடலின் முன்பாக வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டம் இரவு 8.00 மணிவரைக்கும் நடைபெற்றது.

தமது பிரச்சனைகள் குறித்து மகஜர் ஒன்றை ஆளுநரிடம் கையளிக்கும் முகமாக வேலையில்லா பட்டதாரிகள் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் கிழக்கு மாகாண ஆளுநர் அதனை நிராகரித்ததார்.

மேலும் இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகபேச்சாளரிடம் வினாவிய போது, மகஜர் ஒன்று வேலையில்லா பட்டதாரிகளினால் இரண்டு நாளைக்கு முன்பாக ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதாகவும், தற்போதைய நியமனங்களின் பின்பு அடுத்த நியமனங்களின் போது உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் ஆர்பாட்டத்தின் போது சந்திப்பை நிராகரித்தாக குறிப்பிட்டார்.