மட்டக்களப்பில் விமானிகளுக்கான பயிற்சி பாடசாலை

0
431

மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் கட்டுப்பாட்டு மற்றும் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

சிவில் விமான சேவை தொடர்பில் சாதகமான பல விடயங்களை கொண்டுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் தொடர்பில் அக்கறைக் கொண்டு தரப்பினரிடத்தில் இருந்து யோசனைகள் கோரப்பட்டன.

 

இது தொடர்பில் M/s Skurai Aviation நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 
இப்பிரதேசத்தில் நிலவும் பொருத்தமான காலநிலை மற்றும் சிவில் விமான நடவடிக்கைகள் மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து சுமார் 150கிலோமீற்றர் கொண்டு அமைந்துள்ளதனால் நெருக்கடியற்ற விமான சேவையை மேற்கொள்ளமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அமைவாக தேசிய சிவில் விமான சேவை தொழிற்துறையில் ஏற்படக்கூடிய பாரிய வளர்ச்சியில் கிழக்கு மாகாண பொருளாதார செயற்பாடு குறிப்பிடத்தக்க வகையில் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.