தமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களிடமிருந்து தூர விலகி செல்கின்றதா? -சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜ்

0
2415

இலங்கையில் தமிழ் அச்சு ஊடகத்துறை விநியோகத்தைப்; பொறுத்தவரை பெரும் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நவீனமயமாகிவிட்ட ஊடகத்துறை தொழில்நுட்ப உத்திகளுடன் கைகோர்த்து பயணிக்கும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் அச்சு ஊடகத்துறை ஏன் இத்தகைய பின்னடைவை சந்திக்கின்றது என்ற வினாவாக எழும்பலாம் என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜ் தெரிவித்தார்.
‘தமிழ் அச்சு ஊடகத்துறையின் சமகால போக்கு” என்ற தலையங்கத்தில் மட்டக்களப்பில் ‘வெய்ஸ் ஒவ் மீடியா” ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தில் நவம்பர் 12 ஆம் திகதி 2017 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜ் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தொழில்நுட்ப மாற்றத்தால் ஊடகத்துறையில் புதிதாக பிரசவம் எடுத்த ‘டிஜிட்டல்” மற்றும் இலத்திரனியலின் வருகை அச்சு ஊடகத்துறையை பாதித்ததன் விளைவு என்று ஒருசாரார் குறிப்பிட முன்வரலாம்.
இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், வானொலி போன்றன அச்சு ஊடகத்துறைக்கு சவாலாக மேலெழுந்துள்ளன என்பது உண்மையே. ஆனால் இந்த சவாலுக்கு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ள அச்சு ஊடகங்களால் முகம்கொடுக்க முடியாது அந்நாடுகளில் அச்சு ஊடகங்களின் விநியோகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது என்பது உண்மையே.
ஆனால் ஆசிய நாடுகளிலுள்ள அச்சு ஊடகங்கள் ‘டிஜிட்டல்” ஊடகங்களின் வரவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
ஆசியாவின் அச்சு ஊடகத்துறையின் பிரகாசமான அந்தப் பயணத்தில் இலங்கையும் கைகோர்த்து பயணிக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
2015ஆம் – 2016ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி சிங்களம், ஆங்கில தினசரி பத்திரிகைகளின் விநியோகத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் தமிழ் பத்திரிகைகளின் விநியோகம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ் வாரப் பத்திரிகைகளின் விநியோகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்; அறியத்தருகின்றது.
அதாவது 2015 ஆம் ஆண்டில் 2 கோடியே 16 இலட்சமாக இருந்த தமிழ் பத்திரிகைகளின் விநியோகம் 2016 இல் ஒரு கோடியே 93 இலட்சமாக குறைவடைந்துள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு டிஜிட்டல் ஊடகங்களின் வரவே காரணம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோதும், சிங்களம், ஆங்கில அச்சு ஊடகங்களால் ‘டிஜிட்டல்” ஊடகங்களின் சவாலுக்கு எவ்வாறு முகம்கொடுத்து விநியோகத்தில் சாதனை படைக்க முடிந்தது என்ற கேள்விக்கு தமிழ் அச்சு ஊடகத்துறையினர் பதில் கூறவேண்டும்.
இந்த வீழ்ச்சிக்கு தமிழ் அச்சு ஊடகத்துறையில் நிலவுகின்ற பனிப்போர் மாத்திரமல்ல, பெரும்பாலான தமிழ் அச்சு ஊடகத்துறையினர் மக்களை மறந்த நிலையில் செயற்படுவதும் காரணம் என்று கூறப்படுகின்றது.
தமிழ் அச்சு ஊடகங்கள் தமிழ் மக்களை சரியான முறையில் எடைபோட தவறிவிட்டன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.
நான், மிகமோசமான தணிக்கை ஊடகத்துறை மீது பிரயோகிக்கப்பட்ட காலத்திலும், போர் உச்சக்கட்டத்தை எட்டிய காலத்திலும் பணியாற்றியவன். நாம் மக்களுடன் இருந்தோம். மக்களும் எம்முடன் இருந்தனர்.
யாழ் பிராந்தியப் பத்திரிகைகள்
கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் அச்சு ஊடகங்கள் அடைந்துள்ள நவீனமயமாக்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் மிக அதிகமாகவே கொண்டிருக்கின்றன.
⦁ நவீனமயமாக்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் மிக அதிகமாகவேக் கொண்டிருக்கின்ற கொழும்புப் பத்திரிகைகளினால் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பிராந்தியப் பத்திரிகைகள் குடாநாட்டு மக்களிடையே கொண்டுள்ள செல்வாக்கினை தகர்த்துவிட முடியவில்லை என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்தல் பொருந்தும்.
⦁ கொழும்பு அச்சு ஊடகத்துறையின் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிராந்தியப் பத்திரிகைகள் ஒப்பீட்டளவில் ஈடுகொடுக்க முடியாத நிலை இருந்தபோதும் குடாநாட்டு வாசகர்களை தமது கட்டுக்குள் வைத்திருப்பதில் யாழ். பிராந்தியப் பத்திரிகைகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன என்பதும் பதிவுக்குரியதாகும்.
⦁ யாழ். பிராந்தியப் பத்திரிகைகளால் குடாநாட்டுக்கு வெளியில் பிரகாசிக்க முடியாவிட்டாலும்கூட குடாநாட்டுக்குள் அவை தம்மை ஸ்திரப்படுத்திக்கொண்டுள்ளன. இதேநேரத்தில் கொழும்பை மையமாகக்கொண்டு வெளிவரும் பத்திரிகைகளால் குடாநாட்டில் பிரகாசிக்க முடியவில்லை என்பதும் உண்மையாகும்.
⦁ இன்றைய நவீன ஊடகத்துறை வரலாற்றில் பிராந்தியப் பத்திரிகைகள் பிராந்தியத்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றன.
⦁ கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் அச்சு ஊடகங்கள் தமது விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சரிவை மீட்டெடுக்க போராடவேண்டிய நிலையில் இருக்கும் அதேவேளையில் பிராந்திய ரீதியான பத்திரிகைகளின்; போட்டிக்கும் முகம்கொடுக்க முடியாமல் இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் பிராந்தியப் பத்திரிகைகள்.
⦁ கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள், கிழக்கு மாகாணத்தில் பிராந்தியப் பத்திரிகைகளின் இன்றைய நிலை, ஏன் வட பகுதியில் போன்று பிராந்தியப் பத்திரிகைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவரவில்லை?, சமூகக் காரணிகள் உள்ளனவா?, மக்கள் ஆதரவு இல்லையா?., பொருளாதார வசதி இல்லையா?., தொழில் நுட்ப வசதி போதாதா?., கொழும்புப் பத்திரிகைகளின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது.? கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு பத்திரிகை வெளிவர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனரா? , முஸ்லிம் மக்களின் உணர்வலை என்ன? , கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் தேசியப் பத்திரிகைகள் மட்டும் போதுமென நிகை;கின்றனரா? , தேசியப் பத்திரிகைகள் கிழக்கு மாகாண செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவா? , இவை போன்ற பல்வேறு வேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.
ஊடகங்களின் போக்கு.
1. மிக மோசமான, பொறுப்பற்ற தன்மைக்கு ஊடகங்கள் இன்று சென்று கொண்டிருக்கின்றன. எனவே, ஊடகங்களின் சமூக பொறுப்பு மறு ஆய்வு செய்யப்படவேண்டும். என மக்களில் பெரும்பாலானவர்கள் வெளிப்படையாகவே கூறத் தொடங்கியுள்ளனா.; இதனை தமிழ் அச்சு ஊடகங்கள் கணக்கில் எடுக்கவில்லையாயின் மக்களின் நம்பிக்கையை ஊடகங்கள் இழந்துவிடும். அதன்பிறகு, ஒருபோதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது.
2. தமிழ் பேசும் வாசகர்கள் விவேகமுடையவர்கள்.
3. சமூக அக்கறை என்பது பொதுமக்கள், விவசாயி, ஆசிரியர், பொறியியவாளர், மருத்துவர் என அனைவருக்கும் உள்ளது.
4.றுந சுநிழசவ லுழர னுநஉநைன என்கிறார்கள்.அது சரியா என்பது குறித்து ஆராய வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கும் வாசகர்களுக்கும் உண்டு என்ற கருத்து மக்களிடையே உள்ளது.
5. இன்று பெரும்பாலான ஊடகங்கள் படத் தயாரிப்பில் போன்று தயாரிப்பாளர், ,யக்குனர், கதை வசனம் என அனைத்து பாத்திரங்களையும் ஒருவரே வகிப்பது போல் செயற்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர்.
6. மக்களின் குரலை ஒலிக்கச் செய்தாலும் அதற்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருப்பதாக மக்கள் பேசும் நிலை உருவாகியுள்ளது.
7. இன்றைய நிலையில் சமூக ஊடக வலைத்தளங்களை சமூகம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாடல்களும் மேலெழுந்து வருகின்றன.
8. மாற்று ஊடக கலாசாரம் குறித்து மிகுந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டிய நிலைக்கு சமூகத்தை இன்றைய தமிழ் ஊடக கலாசாரம் தள்ளியுள்ளது என்றும் தெரிவித்தார்.