இரட்டை கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

0
352

மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் இரட்டை கொலைக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை 9 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

 

கடந்த மாதம் 18ம் திகதி சவுக்டியில் தாயும் மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு சிலர் மும்முரமாக செயற்படுகின்றமையை கண்டித்து குறித்த இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

பொலிஸாரும் விசேட புலனாய்வு பிரிவினரும் கொலைகாரர்களை மிகவும் கஷ்டப்பட்டு பிடித்தார்கள் எனவும் தற்போது அவர்கள் வெளியில் வருவதற்கு சிலர் உதவுவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் ஒருசில சட்டத்தரணிகள் செயற்படுவது மிகவும் கவலைக்குரியதே பொலிஸார் தங்களது கடமையை மிகவும் சிறப்பாக செய்ததைப்போன்று நீதித்துறையும் செய்ய வேண்டும் என்பதே குடும்பத்தின் நிலைப்பாடாக உள்ளது.