நாடு பூராக 30வருடகாலம் இரத்தஆறு ஓடியது போதாதா?

0
598
இலங்கை நாடு பூராக கடந்த 30வருட காலமாக ஓடிய இரத்த ஆறு போதாதா? இன்னுமின்னும் இனவாதத்தைதூண்டி மக்களை பிரித்து உசுப்பேற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் உரை இனநல்லிணக்கத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.
இவ்வாறு இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கல்முனைத்தொகுதி தலைவரும் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான மு. இராஜேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
 இன்று (11) சனிக்கிழமை அம்பாறைக்கச்சேரியில் கிழக்குமாகாணசபை எல்லநிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இலங்கைத்தமிழரசுக்கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் கட்சிசார்பாக சமர்ப்பணம் செய்யச்சென்றபோது அவர் கருத்துரைத்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்நிலையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் தற்கால சந்ததியிடமும் இனவாத நச்சுவிதையைவிதைக்க ஆரம்பித்துள்ளனர். அவர் தேசிய நல்லிணக்கத்திற்கு ஒவ்வாத பிரசாரத்தை பாராளுமன்றில் கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பென்பது தமிழரின் தாயகம். இதனை மக்கள் தீர்மானிக்கவேண்டும். ஆனால் இடையில் வந்த ஹிஸ்புல்லா இரத்தஆறு ஓடும் என எச்சரிக்கைப்பாணியில் பூச்சாண்டி காட்ட முனைவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
1983 1990 இனவன்முறைகளை நாம் அறியாதவர்களா? திராய்க்கேணி வீரமுனை உடும்பன்குளம் பகுதியில் இராணுவத்துடன் இணைந்து அவர்கள் நடாத்திய காட்டுத்தர்பாரில் ஓடாத இரத்தமா இனி ஓடப்போகிறது? யாரிடம் பூச்சாண்டி காட்டுகிறார்கள்.
எவ்வளவ நடந்தபிறகும் நாம் அவர்களோடு இணைந்து வாழ்வதில் நாட்டம்காட்டகின்றோம்.கிழக்கில் எமது ஆட்சியில் முதலமைச்சர் தொடக்கம் பலதையும் விட்டுக்கொடுத்தோம். இதெல்லாம் ஞாபகமில்லையா? மறந்துவிட்டார்களா?
இரத்தம் ஒன்றும் எமக்கு புதிதல்ல.
இனநல்லிணக்கதிற்கான வரவுசெலவுத்திட்டம் என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் அங்கிருக்கக்கூடிய ஹிஸ்புல்லா இனநல்லிணக்கத்திற்கு விரோதமாக பேசுகிறார்.
பாராளுமன்றம் இத்தகைய பேச்சுக்களை ஊக்குவிக்கின்றதா? இதற்கு நடவடிக்கை எடுக்கமுடியாதா? இது தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகமானது என்ற அடிப்படையில் நடவடிக்கை அவசியம்.
சாதாரணமான ஒருவர் பேசியிருந்தால் தேசிய அமைதிக்கு குந்தகமாகப்பேசினார் என்றுகூறி சட்டநடவடிக்கையேஎடுத்திருப்பார்கள். என்றார்.
இலங்கைத்தமிழரசுக்கட்சியின் காரைதீவுப்பிரதேச அமைப்பாளரும் பிரபல சமுகசேவையாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கருத்துரைக்கையில்:
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரத்த ஆறு ஓடும் எனச்சொல்வது உண்மைதான். அவர் இனவாதத்தைக்கக்கி  வாக்குகள் தேடும் படலம் தற்போது தேர்தல் ஒன்று வந்திருக்கிறது என்பதை கட்டியம் கூறிநிற்கிறது. இதனை முஸ்லிம் சகோதரர்கள் அறியாமலில்லை. அதற்காக அவர்களை ஒட்டுமொத்தமாக பழிசுமத்தமுடியாது.
இது தனியே ஹிஸ்புல்லாவின் கருத்தாகமாத்திரம் எடுத்து நாம் பார்க்கவேண்டும்.
உண்மைதான் 1990ம் ஆண்டு   காலப்பகுதியில் வீரமுனை திராய்க்கேணிசத்துறுகொண்டான் கல்முனை கிழக்குபல்கலைக்கழகம்மூதூர் புதுக்குடியிருப்பில் போன்ற இடங்களில் முஸ்லிம் தீவிரவாதிகளால் தமிழர் படுகொலை செய்ததைதான் சொல்லுகின்றார்.
ஏற்கனவே ஓட்டமாவடியில் பூர்விகமாக வாழ்ந்த தமிழரை ஊரை விட்டு துரத்தி சிலரை கொலை செய்து ஓட்டமாவடி காளி கோயிலை இடித்தது தானே என்று கடந்த வருடம் ஒத்துக்கொண்டார்.
பிறகு 90ம் ஆண்டு காலத்தில் தாம் செய்த படுகொலைகளையும் காணி பிடிப்புக்களையும் கோயில் இடிச்சதையும் நீதிமன்றில் வழக்கு போடுவாங்க என்பதற்காக நீதிபதியை மாற்றியவர் .கடந்த வருடம் கிழக்கு இஸ்லாமியரால் கௌரவிப்பு நடைபெற்றது அதையும் ஒத்துக்கொண்டார்.
தற்போது மீண்டும் தமிழரை கொலை செய்து இரத்த ஆறு ஓட வைக்கும் முயற்சிக்கு தேவையான ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளை உருவாக்க ரிதிதென்னயில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் பயிற்சி கொடுக்கத்தான் மாணவர் பெயரில் இஸ்லாமிய தீவிரவாதி உற்பத்தி செய்யப்பட உள்ள ஆள் பலத்தின் நம்பித்தான் இரத்த ஆறு ஓட வைக்கும் என தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதனைப்பார்த்துக்கொண்டு நல்லாட்சி அரசாங்கம் இருப்பதா? இந்தச்செய்தியை ஒரு தமிழ்ன் சொல்லியிருந்தால் போர்க்கொடி தூக்கியிருப்பர்கள். இனியாவது சிங்தியுங்கள். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது யார் என்று .
தமிழ்மக்கள் போராடிப்போராடி அனைத்தையும் இழந்ததுதான்  மிச்சம் அனுபவித்தது எல்லாம் இவர்களே. மக்களே ஒன்றுபடுங்கள். இன்றேல் இருப்பதையும் இழக்கவேண்டிநேரிடும். என்றார்.