மட்டு.உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளராக வி. மகேந்திரநாதன்

0
649

மட்டக்களப்பு, உள்நாட்டு இறைவரித் திணைக்களப் (Department of Inland Revenue)பிராந்தியப் பணிமனையின் உதவி ஆணையாளராக கடமையாற்றிய வைரமுத்து மகேந்திரநாதன் இத்திணைக்களத்தின் பிரதி ஆணையாளராக (Dupty Commissioner) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வைரமுத்து மகேந்திரநாதன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு உட்பட கடந்த 24 வருட சேவையைப் பூர்த்திசெய்துள்ளார்.

செட்டிபாளையத்தை பிறப்பிடமாகக் கொண்ட மகேந்திரநாதன் கல்முனை உவேஸ்லி கல்லுரியின் பழைய மாணவரும்இ கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார்.

இவரது பதவியுயர்வானது கடந்த 2016ம்ஆண்டு, அக்டோபர் மாதம் 3ம்திகதியிலிருந்து செயற்படுத்தப்படும் வகையில் கடந்த வாரத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.