மீண்டும் தலைதூக்கின்றது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை ! தொழிலுரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மகஜர் கையளிப்பு.

0
810

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் வட கிழக்கு பிரதேசங்களில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் கடந்த காலங்களில் தோற்றி சித்தியடைந்துள்ள போதும் கிழக்கு மாகாண சபையால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முறணான முறையில் தொழிலுரிமை மீறப்பட்டுள்ளது .அதன் பிரகாரம் பரீட்சையில் சித்தியடைந்தும் தொழிலுரிமை மீறப்பட்டமை தொடர்பாக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அம்பாறை  மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட மகஜர் கையளிப்பு நிகழ்வு இன்று 30 கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்ட முஸ்லீம்  வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச். ஜெசீர் தலைமையில் கல்முனை மனித உரிமை பிராந்திய அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ் இசதீனிடம் கையளிக்கப்பட்டதுடன்.

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகளினால் அண்மைக் காலங்களில் முன்னெடுக்கப்பட்ட காலவரையரையற்ற சத்தியாக்கிர போராட்டமானது பரீட்சை முறையிலான வேலைவாய்ப்பு வழங்குவதாக தீர்மானித்து கைவிடப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகளின் குளறுபடிகளின் காரணமாக மீண்டும் போராட்டங்களில் முன்னெடுக்கும் சூழ்நிலையில் உள்ளனர். சுற்று நிறுபத்தில் கூறப்பட்டுள்ள வயது வந்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட வேண்டும் எனும் விடயம் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளது அத்துடன் பரீட்சை பெறுபேறுகளில் புள்ளிகள் அடிப்படையில் வேறுபட்டுள்ளது  அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் இன்று இந்த மகஜரை கையளித்துள்ளோம் என  சங்கத்தின் தலைவர் ஏ.எச். ஜெசீர் மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்..